பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்படை எழுச்சி-3-103 அல்லற்படையின் ஆற்றலையும் யாரும் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. சிவபுர யாத்திரைக்குச் செல்லும் அடியார்கள் எளிமையானவர்களாகவும், போராடும் வல்லமை இல்லாதவர்களாகவும் இருந்துவிட்டால் சிவபுர யாத்திரையின் பயனை அடையமுடியாது. இதுவரை இல்லாத தைரியத்தையும் அடியார்களைத் தலைமையேற்று நடத்திச் செல்லும் ஆற்றலையும் தில்லைக் கூத்தன் அடிகளாருக்குத் தந்தான் என்பதை யாத்திரைப் பத்தில் கூறியுள்ளோம். தலைமை ஏற்றவராகிய அடிகளார் சிவபுர யாத்திரைக்குப் புறப்படத் தயாராகவுள்ள அடியார் கூட்டத்தைத் திரும்பிப் பார்க்கிறார். இவர்கள் தனித்துச் சென்றால், மாயப் படை, அல்லற் படை என்பவற்றிற்கு இவர்கள் ஈடுகொடுக்க முடியாது. ஆதலின் இவர்களிற் சிலரைத் தேர்ந்தெடுத்துப் படை எழுச்சியின் நுணுக்கங்களை -யும் தந்திரங்களையும் அறிவுறுத்துகின்றார். திருப்படை எழுச்சி என்ற தலைப்பின் நுணுக்கம் இதுவேயாகும். ‘பிரபஞ்சப் போர்’ என்பது இதன் உட்தலைப்பு ஆகும். பிரபஞ்சத்தில் யாரோ இருவர் செய்ய முற்படும் போர்பற்றி இந்த உட்தலைப்பு வந்ததா, அல்லது பிரபஞ்சமே வேறு எதனுடனாவது போர்தொடுத்ததா என்ற வினாக்களை எழுப்பினால் இந்த உட்தலைப்பு எவ்வளவு அர்த்தமற்றது என்பது விளங்கும். 615. ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின் மான மா ஏறும் ஐயர் மதி வெண் குடை கவிமின் ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள் - வான ஊர் கொள்வோம் நாம் மாயப் படை வாராமே 1 இந்த முதற் பாடல் அடியார் படையில் உள்ளவர்கள் என்னென்ன செய்யவேண்டும் என்பதை மிக விளக்கமாகக் கூறுகிறது. குதிரைப்படை வீரர்கள் வாள் ஏந்திச் செல்வர்.