பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104- திருவாசகம் சில சிந்தனைகள்-5 அவர்களுக்கு முன்னர்ப் போர் எழுச்சியை ஊட்டக்கூடிய பறை முழங்கிக் கொண்டு செல்லும். அவர்களுள் தலைவராக இருப்பவர்கள், அடுத்த தரத்தில் உள்ளவர்கள் ஆகிய இருசாராருக்கும் தலைக்குமேல் வெண்கொற்றக்குடை விரிந்திருக்கும். கவசம் அணிதல் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்; கவசத்தில் புகுதல் என்பது ஒரு புதுமையான சொல்லாட்சியாகும். கவசம் 'அணிதலைத்தான் "புகுமின்கள்’ என்று சொல்லுகிறாரா? இல்லையென்பதை உறுதியாகக் கூறலாம். கவசம் என்பது தலை, மார்பு, முழங்கை, முழங்காலிற்கும் கீழ் உள் பகுதிகளில் அணியப்பெறுவதாகும். ஆனால், அடிகளார் கூறும் கவசம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை அணிந்து கொள்ளப்படும் கவசமாகும். அணியப்பெறும் போர்க் கவசம் உலோகத்தால் ஆயது. உயர்திணையைச் சேர்ந்த வீரர்கள் அஃறிணைப் பொருளாகிய கவசத்தை அணிகிறார்கள். ஆனால், இங்கே பேசப்பெறும் கவசம் இந்த வகையைச் சேர்ந்ததன்று. அதனாலேயே கவசத்தை அணியுங்கள் என்று சொல்லாமல் அதனுள் புகுந்துவிடுங்கள் என்கிறார். ஒன்றினுள் புகுந்துவிடுதல் என்றால் சரணாகதி அடைதல் என்பதே பொருளாகும். இரும்புக் கவசத்திடம் யாரும் சரணடைவதில்லை. ஆனால், திருநீறு ஆகிய கவசத்திடம் யாரும் தாராளமாகச் சரண் அடையலாம். திருநீற்றுக் கவசத்தில் முழுவதுமாகப் புகுந்துகொண்டு, குதிரைமேல் ஏறி, வெண்கொற்றக் குடையின்கீழ், ஞான வாளை ஏந்திக்கொண்டு, முன்னே நாதப் பறை முழங்கப் புறப்படுங்கள் என்கிறார். o இப்பாடலின் முதலிரண்டு அடிகளில் ஐயர்' என்ற சொல் வருவதால், அதற்குச் சிவபெருமான் என்று பொருள் செய்து உரை வகுத்துள்ளனர்.