பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ÉGluco— srušef o 105 岛 வியப்பாகும் என்ற தொல்காப்பிய அடிப் படையில் உண்டாக்கப்பட்டது, இந்த ஐயர்' என்ற சொல். அதாவது நம்மால் மதிக்கப்படும், வணங்கப்படும் பெருமை வாய்ந்தவர்கள் என்பதே இதன் பொருளாகும். நாதப் பறை அறைகின்றவர்கள், குடை பிடிக்கின்றவர்கள் ஆகிய அனைவரும் போர்ப்படையில் இருப்பவர்களே ஆயினும், குதிரைமேல் ஏறி வாளேந்தும் வீரர்களிலும் இவர்கள் வேறுபட்டவர்கள். அதனாலேயே ஞானவாள் ஏந்தும் ஐயர்' , 'மானமா ஏறும் ஐயர்' என்று இவர்களைப் பிரித்து ஒதினார். பறை அறைதலும் குடை பிடித்தலும் எல்லாப் படைக்கும் பொதுவானவை. ஆனால், அடிகளார் கூறும் இப்படை உடற்போர் செய்யும் வீரர்களைக் கொண்டதன்று என்பதைக் கூற, சில சொற் பிரயோகங்களைப் பயன்படுத்துகிறார். போர்வீரர்கள் கையாள்வது இரும்பினால் செய்த வாள். அது உடலுக்கு மட்டுமே ஊறு செய்யும். ஆனால் அடிகளார் படையில் உள்ளவர்கள் கைப்பிடித்திருப்பது ஞானமாகிய வாளாகும். எதிர்த்துவரும் மாயப் படையை வெல்ல இரும்பாலாகிய வாள் பயன்படாது; ஞானம் ஒன்றே அஞ்ஞானமாகிய மாயத்தை அழிக்க வல்லது ஆதலின் ஞானவாள் ஏந்தும் என்றார். அடிகளாரைப் போன்று போர்க்கலையில் வல்லவர்கள் மட்டுமே 'ஏந்தும் என்ற சொல்லைப் பயன்படுத்தமுடியும். ஞானவாளைக் கட்டிக்கொள்ளுங்கள், பிடித்துக் கொள்ளுங்கள் என்ற எந்தச் சொல்லைப் போட்டாலும் 'ஏந்தும் என்ற சொல்லுக்கு இணையாகாது. உறையிலிருந்து கழித்து வீசுவதற்குத் தயாராக வாளிருக்கும் நிலையை ஏந்தும் என்ற சொல்லால் குறிப்பிட்டார். அடுத்துள்ளது 'மான மா ஏறும் ஐயர்' என்பதாகும். குதிரை (மா) என்ற சொல்லுக்கு முன்னர் மானம் என்ற சொல் பயன்படுத்தப்பெற்றுள்ளது. மானம் என்ற