பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்படை எழுச்சி 107 வேகமாகச் சென்று வாளால் பகைவர்களை வெட்டலாம். ஆனால், அவர்களுடைய கருவிகளிலிருந்து இவர்கள் தம்மைக் காத்துக்கொள்ள என்ன தேவை? அதையே மூன்றாவது அடியில் நீற்றுக் கவசம் அடையப் புகு மின்கள்' என்கிறார். இப்பாடலில் கூறப்பெற்றவை அனைத்தும் தனித்தனி வீரர்களுக்கு உரியவை ஆகும். உருவகம் பாடுவதில் அடிகளார் ஒப்பற்றவர் என்பதை முன்னரும் கண்டோம். அச்சிறப்பிற்கு இப்பாடல் மற்றோர் உதாரணமாகும். 616. தொண்டர்காள் தூசி செல்லீர் பத்தர்காள் சூழப் போகீர் ஒண் திறல் யோகிகளே பேர் அணி உந்தீர்கள் திண் திறல் சித்தர்களே கடைக் கூழை செல்மின்கள் அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லற் படை வாராமே 2 எவ்வளவு சிறப்புடைய வீரர்களாயினும் போருக்குச் செல்கையில் அணிவகுப்பு இன்றியமையாதது. கடலில் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுத்ததுபோல் வருவதால் அந்த அலைகளின் ஆற்றல் மிகப்பெரியதாகி விடுகின்றது. அந்த அடிப்படையில் இப்பாடலில் அடியார் படையின் அணிவகுப்பை முறைப்படுத்துகிறார் பழைய பாண்டிய அமைச்சர். இன்றுகூடப் போருக்குச் செல்லும் படைகளில் தூசுப்படை, சூழ்ந்து வரும் படை, நடுவேயுள்ள மூல பலப் படை, இறுதியாகவுள்ள பின் காவல் படை (RearGuard) எனப் படைப்பிரிவுகள் வகுக்கப் பட்டுள்ளதை அறியலாம். இந்த நான்கு பகுப்புக்களில் யார்யார் எங்கெங்கே இருக்கவேண்டும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டுப் பேசுகிறார் பழைய அமைச்சர். தொண்டர்கள் என்பவர்கள் பல்வேறு வகைப்பட்ட தொழில்களையும் செய்யும் உடல் வலிமையும், மனத்திடமும் அனுபவமும் உடையவர்கள். அதனால் 'தொண்டர்காள்