பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108-திருவாசகம் சில சிந்தனைகள்-5 தூசி செல்லீர்' என்றார் அடிகளார். தூசிப் படை என்பது படைக்கு முன்னர் நின்று, கொடியைத் தாங்கிக்கொண்டு வழிவகுத்துச் செல்லும் படையாகும். அடுத்துள்ளவை பக்கவாட்டிலும், சுற்றியும் உள்ள படைகளாகும். நடுவே உள்ள I Jóðl- வீரர்களுக்கு வேண்டுமானவற்றை வேண்டும்போது தருவதே இவர்கள் வேலை. இறையன்பில் தோய்ந்த பக்தர்கள் தன்னலம் அற்றவர்களாய்ப் பிறர்க்கு உதவுவதையே கடமையாகக் கொண்டவர்கள் ஆதலின் 'பத்தர்காள் சூழப்போகீர்’ என்றார்.

படையின் நடுவே இருப்பவர்கள் மூலபலம் போன்றிருந்து படை பின்தங்கிவிடாமல் செலுத்தக் கூடியவர்கள் ஆதலின் யோகிகளே ஒண்திறல் பேர் அணி உந்தீர்கள்’ என்றார். நான்காவதாக உள்ளது பின்காவற் படையாகும். அதில் 'திண் திறல் சித்தர்களைச்' செல்லுமாறு பணிக்கின்றார் அடிகளார். இவர்கள் அட்டமா சித்திகளும் வல்லவர்கள் ஆதலின் முன்னே செல்லும் படைக்கு எவ்வித அச்சமும் தோன்றாதபடி எதிரே உள்ள அல்லல் படை'யை தம்முடைய அணிமா, லகிமா முதலிய சித்திகளால் பெரிதாக்கியும், சிறிதாக்கியும் தம்முடைய படைவீரர்கட்கு அச்சம் தோன்றாமல் இருக்கச் செய்வார்கள். கடைக்கூழை என்பது Rear-Guard என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம்போல் அமைந்துள்ளதைக் dossroosquirii). ওঁ ওঁ ওঁb