பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. திருவெண்பா |அனைந்தோர் தன்மை) திருவெண்பா எனற தலைப்புடன் இங்குக் காணப்பெறும் பதினொரு பாடல்களும் வெண்பா யாப்பில் அமைந்திருத்தலின் திருவெண்பா என்று யாரோ பெயரிட்டுள்ளனர். பொதுவாக உணர்ச்சிகளை வெளியிட வெண்பா யாப்பு அதிகம் துணைபுரிவதில்லை எனத் திறனாய்வாளர் கூறுவர். நான்கு சீர், ஆறு சீர், எட்டுச் சீர் என்ற முறையில் வரும் விருத்தப்பாக்களே கவிஞன் விருப்பம்போல் உணர்ச்சிகளை வெளியிட உதவும். வெண்டளை இலக்கணத்திற்குக் கட்டுப்பட்டு வரும் வெண்பாவில் செய்திகளைக் கூறலாமே தவிர, உணர்ச்சிகளை வெளியிட வாய்ப்புக் குறைவு. என்றாலும், அடிகளார் பெரும் கவிஞர்கள் ஆதலின் வெண்பா யாப்பில் இயற்றப்பெற்ற திருவெண்பா, பண்டாயநான்மறை என்பவற்றிற்கட ஆர்க்கோ அரற்றுகோ என்று தொடங்கும் பாடலிலும் (618) ‘பண்டாய நான்மறை என்று தொடங்கும் பாடலிலும் (628) உள்ளத்தில் முகிழ்த்து எழும் உணர்ச்சிக்கு வடிவு தந்துள்ளார் என்பதை அறியலாம். உணர்ச்சிகளுக்கு முதலிடம் தந்து நூற்றுக் கணக்கான பாடல்களைப் பாடிய அடிகளார், செய்திகளை மட்டும் கூறுவதற்கு வெண்பா யாப்பை மேற்கொண்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. வெண்பா யாப்பில் அமைந்துள்ள 'திருத்தசாங்கம் ஏனைய திருவாசகப் பாடல்களோடு எவ்விதத்திலும் ஒப்பவைத்து எண்ணப்படக்கூடியது அன்று என்று முன்னரே கூறியுள்ளோம். - t