பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 @ GATಆಹ। சில சிந்தனைகள்-5 திருவெண்பாவை அடுத்து வைக்கப்பெற்றுள்ள “பண்டாய நான்மறை'யும் வெண்பா யாப்பில்தான் உள்ளது. வெண்பா யாப்பை ஓரளவு உணர்ச்சியும் தோன்ற வெற்றிகரமாக முதன்முதலில் கையாண்டவர் காரைக்கால் அம்மையாரே ஆவார். சங்க காலத்தில் வெண்பா யாப்பை அதிகமாக யாரும் கையாண்டதாகத் தெரியவில்லை. ஆசிரியப்பாவிற்கும் உணர்ச்சிகளை வெளியிடும் இயல்பு குறைவு என்றாலும், வெண்பாவைப்போல் நான்கு அடியில் முடியாமல் தொடர்ந்து பல அடிகள் வருவதால் இக்குறையைச் சரிக்கட்ட முடிந்தது. - விருத்தப்பாக்கள் அரங்கேறியவுடன் ஆசிரியப்பா வெண்பா ஆகியவை ஒளிமழுங்கிய தாரகைகளாய் ஆகிவிட்டன. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அடிகளார். முதலில் திருக்கோவையாரும் அடுத்துத் திருவாசகமும் பாடிய அடிகளார். என்ன காரணத்தாலோ மூன்று இடங்களில் வெண்பாக்களைக் கையாண்டுள்ளார். அவற்றுள் திருத்தசாங்கம் பஞ்சாங்கம்போல் நாடு, மலை, ஆறு என்ற செய்திகளைக் கூறுகின்றது. திருவெண்பாவில் அடிகளார் கூறும் செய்திகள் அனைத்தும் திருப்பெருந்துறை நிகழ்ச்சிபற்றியனவாகும். அந்நிகழ்ச்சி அவரை மிகப் பெரிய அளவில் ஆட்கொண்டு, இறையருளில் மூழ்குவித்து, உணர்ச்சிப் பிழம்பாக மாற்றிப் பரா அமுதாகிய திருவாசகத்தைப் பாடச்செய்தது. யாத்திரைப் பத்துப் பாடுகின்ற நேரத்திலேயே அடிகளாரின் உணர்ச்சிகளெல்லாம் அடங்கித் தில்லைக் கூத்தன் திருவடி மிக அருகில் உள்ளது என்ற நிலை தோன்றிவிட்டது. மேலும் அத்திருவடியில் உறுதியாகத் தமக்கோர் இடமுண்டு என்பதை அறிந்த நிலையில் உணர்ச்சி கொப்பளிப்பதற்குத் தேவையில்லாமற் போய்