பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலாப் பத்து 3 குருநாதர், அடியார் கூட்டம் என்ற எண்ணங்கள் மாறி மாறி அடிகளாரின் மனத்தில் தோன்றி மறைந்தன. கூத்தனைத் தரிசிக்கத்தான் தில்லைக்குச் சென்றார். அப்படிச் செல்லும்போதுகூட, திருப்பெருந்துறையில் கண்ட அடியார் கூட்ட நினைவுதான் அவருடைய மனத்தில் மேலோங்கி நின்றது. அப்பொழுது பாடப்பெற்றதுதான், கோயில் மூத்த திருப்பதிகம். அந்தப் பத்துப் பாடல்களிலும் அடியார் கூட்டத்திடை தம்மை வைக்கவேண்டுமென்றே அடிகளார் கேட்டுக்கொள்கிறார். அது நடவாதபோது, தில்லையில் அடிகளார் பல நாட்கள் தங்கியிருத்தல் வேண்டும். அத்தகைய சந்தர்ப்பத்தில் ஒரு நாள் கூத்தனைத் தரிசிக்கும் நிலையில், திருப்பெருந்துறை நினைவுகள் வருகின்றன. அவற்றைச் செய்தவர் குருநாதர் என்ற நினைவும் அடுத்து வருகின்றது. கூத்தனையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த அடிகளாருக்குக் கூத்தனே குருநாதராகவும் மாறிக் காட்சி தருகிறான். அந்த நிலையில்தான் அணிகொள் தில்லை கண்டேனே' என்ற பகுதி பாடப்பெறுகிறது. திருப்பெருந்துறையில் என்ன நிகழ்ந்தது? குருநாதர் இவரைக் கண்டார்; அடுத்த விநாடி இவரை ஆட் கொண்டார். அதேதான் தில்லையிலும் நடைபெறுகிறது. 'கண்டேனே' என்று கண்ட பத்தில் பாடியவர் இப் பதிகத்தில் 'குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே’ என்று பாடுகிறார். அதாவது, புறத்தே நின்றவனைக் கண்களால் கண்டேன், அடுத்து அவனை என்னுள் ஆவாஹனம் செய்துகொண்டேன் என்ற கருத்தில் அமைகிறது குலாப் பத்து. - - திருப்பெருந்துறையில் கண்டவரும் கொண்டவரும் குருநாதர், தில்லையில் கண்டவரும் கொண்டவரும் அடிகளாரே ஆவார். பலர் இந்த வேற்றுமையைக்