பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்பா 111 விட்டது. அந்த நிலையில் அமைதியே வடிவாக இருந்து, தாம் தோன்றி வளர்ந்த மனிதசமுதாயத்திற்குச் சில அறவுரைகளை யாத்திரைப் பத்தில் கூறுகிறார். இப்போது அதுவும் முடிந்துவிட்டது. இரயில் நிலையத்தில் வண்டிக்காகக் காத்திருப்போர் பழையனவற்றை நினைந்து அசைபோடுவதைப்போல, திருப்பெருந்துறை நிகழ்ச்சியை நினைந்து அசைபோடுகிறார் அடிகளார். 'நானேயோ தவம் செய்தேன்’ (555) என்று பாடுவதுபோன்ற வியப்போ உணர்ச்சியோ இங்கில்லை. புறநிலையில் நின்று நடந்தவற்றை எண்ணிப்பார்த்து அவற்றுக்கு ஒரு வடிவு கொடுக்கும் முயற்சியே திருவெண்பா ஆகும். ‘அணைந்தோர் தன்மை என்பது இப்பதிகத்தின் உட்தலைப்பாகும். அணைந்தோர் என்பதற்குச் 'சீவன் முத்தர் என்று பொருள் கூறியுள்ளனர். இந்த உட்தலைப்பை ஏற்க மனம் இடந்தரவில்லை. 617. வெய்ய வினை இரண்டும் வெந்து அகல மெய் உருகிப் பொய்யும் பொடி ஆகாது என் செய்கேன்- செய்ய திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ மருவாது இருந்தேன் மனத்து 1 நல்வினை தீவினை என்ற இரண்டும் வெந்து ஒழியவில்லை; உடலும் உள்ளமும் உருகவில்லை; உடன்பிறந்த பொய்யும் பொடியாகவில்லை. ஏன்? திருவார்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள குருநாதரின் திருவருள் என்ற செந்தீயை மனத்தில் மருவாதிருந்த காரணத்தால் இவை நிகழவில்லை என்று வருந்துகிறார். திருவடியைத் தழுவியிருந்தால் மேலே கூறியவை நடைபெற்றிருக்கும். இவற்றைப் பொடியாக்கும் இயல்பு திருவடி ஒன்றிற்கே இருத்தலின் அத்திருவடியைச் செந்தி' என்று உருவகிக்கிறார். தீ என்று கூறியவுடன் அதனுடைய சுடுகின்ற இயல்புதான் மனத்தில் தோன்றும். மேலே கூறிய