பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14-திருவாசகம்-சில சிந்தனைகள் 5 மெய்ஞ்ஞானத்தை ஒரே விநாடியில் புகுத்தினான் என்றால் இது பரஞானம் என்பது பெறப்படும். பரஞானம் ஒன்றுதான் சித்தத்தில் நிலைகொள்ளும். இதன் எதிரான அபரஞானம் மூளையின்பாற்பட்டதாகும். அது அறிவுவழிப் பணிசெய்வதாகும். குருநாதர் பரஞானத்தை ஒரேவிநாடியில் தம்சிந்தனையில் புகுத்தினார் என்பதையே அடிகளார் வேல் மடுத்து என் சிந்தனைக்கே கோத்தான் என்று பாடுகிறார். இதிலும் ஒர் அழகும், நுண்மையும் பொதியப்பெற்றுள்ளன. சித்தத்தில் கோத்தான் என்று பாடியிருக்கலாம். அவ்வாறில்லாமல் என் சிந்தனைக்கே கோத்தான் என்றல்லவா அடிகளார் பாடுகிறார்! சித்தத்தில் தோன்றுவதே சிந்தனை எனப்படும். பரஞானத்தைச் சித்தத்தில் கோத்தான் என்று கூறாமல், சிந்தனைக்கே கோத்தான் என்று கூறியமையால் அந்தச் சித்தத்திலிருந்து வெளிப்படும் சிந்தனை அனைத்துமே பரஞானமாக வெளிப்படுமாறு செய்தான் என்ற அருங்கருத்தை இங்கே பேசியுள்ளார். 620. முன்னை வினை இரண்டும் வேர் அறுத்து முன் நின்றான் பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன்- தென்னன் பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன் வரும் துயரம் தீர்க்கும் மருந்து 4 'பெருந்துறைப் பேராளன் முன்னை வினையிரண்டும் (சஞ்சிதம், பிராரத்துவம் முன்னின்று வேரறுத்தான். இதன் பயனாகப் பெரும் கருணையுடையவனாகிய அவன் இனி வரப்போகின்ற பிறப்புக்களையும் அறுத்துவிடுவான். நீள்கின்ற இப்பிறப்பில் ஆர்மியவினை காரணமாக ஏதேனும் துயரங்கள் வருவதாக இருப்பின் அதற்கும் மருந்தாக உள்ளான் என்றபடி