பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்பா 115 621. அறையோ அறிவார்க்கு அனைத்து உலகும் ஈன்ற மறையோனும் மாலும் மால் கொள்ளும்- இறையோன் பெருந்துறையுள் மேய பெருமான் பிரியாது இருந்து உறையும் என் நெஞ்சத்து இன்று 5 அறைகூவல் விடுதல் என்பது நம்பாதவர்களை நம்பச் செய்வதற்குரிய ஒர் உபாயமாகும். மாலும் நான்முகனும் அறியமுடியாது மயங்குகின்ற ஒருவன் அடிகளார் உள்ளத்தில் தங்கியுள்ளதாக அவரே கூறுகின்றார். அந்த மாலும் நான்முகனும்கூட இதனை நம்பமாட்டார்களே! அப்படியிருக்க உலகத்தார் எப்படி நம்புவார்கள்? இவர்களை நம்பவைப்பான் வேண்டி அறைகூவுகின்றேன். என்கிறார் அடிகளார். . 622. பித்து என்னை ஏற்றும் பிறப்பு அறுக்கும் பேச்சு அரிது ஆம் மத்தமே ஆக்கும் வந்து என் மனத்தை அத்தன் பெருந்துறையான் ஆட்கொண்டு பேர் அருளால் நோக்கும் மருந்து இறவாப் பேரின்பம் வந்து 6 மருந்து போல்பவனை மருந்து என்றார். இறவாப்பேரின்பம்-வீடுபேறு 'மருந்தாகவும், அத்தனாகவும் உள்ள பெருந்துறையான் என்னுட் புகுந்து என்னைப் பித்தாக்கினான்; என்னுடைய பிறப்பை அறுத்தான்; இன்னது என்று எடுத்து விளக்கிச் சொல்ல முடியாதபடி அவன் திருவடி ஒன்றையே பற்றிநிற்கும் உன்மத்தனாக என்னை ஆக்கினான். இத்தனை செயல்களையும் பெருந்துறை நாயகன் தன் அருள்நோக்கம் ஒன்றினாலேயே செய்துவிட்டான்' என்கிறார். 623. வாரா வழி அருளி வந்து எனக்கு மாறு இன்றி ஆரா அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர். திருத்தன் பெருந்துறையான் என் சிந்தை மேய ஒருத்தன் பெருக்கும் ஒளி 7