பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 திருவாசகம் சில சிந்தனைகள்-5 திருத்தன் என்பது தீர்த்தன் தூய்மையே வடிவானவன்) என்ற வடசொல்லின் தமிழாக்கமாகும். சிறப்புப்பொருந்திய திருப்பெருந்துறையிலுள்ள துய்மையே வடிவினனாகிய அவன் என் சிந்தையுள் வந்து ஒளிவடிவாகத் தங்கினான். அதன் பயனாக மறு பிறப்பில்லாமல் செய்தான்; இந்தப் பிறப்பில் நினைத்தது எவ்வித மாறுபாடுமின்றி நினைத்தபடியே வந்துநிற்கும் அமுதாகவும் என்றும் தெவிட்டாத இன்பம் தரும் அமுதாகவும் எனக்கு அமைந்தான்' என்கிறார். 624, யாவர்க்கும் மேல் ஆம் அளவு இலாச் சீர் உடையான் யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை யாவரும் பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு என் + எம்பெருமான் மற்று அறியேன் செய்யும் வகை 8 அனைத்தினும் மேலாகவுள்ள அவன் அனைவர்க்கும் கீழாகிய தம்மைப் பிடித்து ஆண்டு இன்பத்துள் வைத்தான். அங்ங்னம் வைத்தமைக்கு என்ன கைம்மாறு செய்யமுடியும்? என்று கூறுகிறார். 625. மூவரும் முப்பத்து மூவரும் மற்று ஒழிந்த ! தேவரும் காணாச் சிவபெருமான்- மா ஏறி வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க மெய்யகத்தே இன்பம் மிகும் 9 . 'மும்மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோருள் யாரும் கண்டிராத சிவபெருமான் குதிரைச் சேவகனாகக் குதிரையில் அமர்ந்து தன் திருவடிகளைக் குதிரையின் அங்கவடியில் புகுத்திக் கொண்டு வந்ததை நினைந்து தொழத்தொழ என்னுள் இன்பம் மிகும்’ என்றபடி