பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்பா &-17 626. இருந்து என்னை ஆண்டான் இணை அடியே சிந்தித்து இருந்து இரந்துகொள் நெஞ்சே எல்லாம்- தரும் காண் பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன் மருந்து உருவாய் என் மனத்தே வந்து 10 'பெருந்துறை நாயகன் பிறவியைப் போக்கும் மருந்தாக என்னுள் புகுந்து இருந்துவிட்டான். ஆதலின் நெஞ்சே! அவன் திருவடிகளைச் சிந்தித்து, நீ விரும்பியவற்றை யெல்லாம் அவனை இரந்து பெறுவாயாக!' என்கிறார். 627. இன்பம் பெருக்கி இருள் அகற்றி எஞ்ஞான்றும் துன்பம் தொடர்வு அறுத்துச் சோதி ஆய்- அன்பு அமைத்து சீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊர் ஆகக் கொண்டான் உவந்து 11 'பெருமை மிகுந்த திருப்பெருந்துறை நாயகன் தான் விரும்பித் தங்கும் ஊராக என்னுடைய சிந்தையையே கொண்டான். ஆதலின் என்ன நிகழ்ந்தது? இன்பம் பெருகிற்று; அஞ்ஞானமாகிய இருள் அகன்றது; துன்பம் என்பது தலைகாட்டாதபடி அகன்றது; அன்பு பெருகிற்று. அந்த அன்பு அவனினும் வேறானதன்று ஆதலால். அதாவது அன்பே சிவம் ஆதலால் ஒளிவடிவாய் நின்றது’ ώΤώύΥθ5. -