பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டு_ஆய_நான்மறை-உ19 கூத்தன் திருவடி சேர்தல் மிக அண்மையிலுள்ளது என்பதை அறிந்துவிட்ட காரணத்தால் உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கிவிட்டதோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. யாத்திரைப் பத்தில்கூட இதே நிலைதான். மக்களுக்கு உதவ வேண்டும். திருவடி சேர்வதற்கு முன்னர், தம் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை, விட்டு விட்டு வருகின்ற எண்ணங்களாகக் கோத்துச் சுருங்கச் சொல்ல வேண்டும் என்று அடிகளார் நினைத்தார் போலும். உணர்ச்சி அதிகம் கலவாமல் எண்ணங்களுக்கு வடிவு கொடுக்கவேண்டும் என்று அடிகளார் நினைத்தபோது வெண்பா யாப்பு கைகொடுத்தது. அந்த அடிப்படையை மனத்துட் கொண்டு திருவெண்பா, பண்டாய நான்மறை என்ற இரண்டு பகுதிகளையும் நோட்டம்விட்டால் இந்த இரண்டு பகுதிகளும் மேலே கூறியவற்றிற்குப் பொருத்தமாக அமைவதைக் காணலாம். 'அநுபவத்திற்கு ஐயமின்மை உரைத்தல்' என்பது இதன் உட்தலைப்பு ஆகும். எவ்வளவு சிந்தித்தும் இத் தலைப்பின் பொருத்தத்தை என்னால் அறியமுடியவில்லை. 628. பண்டு ஆய நான்மறையும் பால் அனுகா மால் அயனும் கண்டாரும் இல்லைக் கடையேனைத் தொண்டு ஆகக் கொண்டருளும்,கோகழி எம் கோமாற்கு நெஞ்சமே உண்டாமோ கைம்மாறு உரை 1 மிகப் பழமையானதாகிய நான்கு வேதங்களும் அவன்பால் அணுகா, தூரத்தே நின்று ஐயா என்று அழைப்பதுதவிர நான்மறைகள் செய்யக்கூடியது எதுவும் இல்லை என்பதை வேதங்கள் ஐயா என, ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே’ (1; 34, 35) என்று அடிகளாரே பாடியுள்ளார்; இங்கும் அதே கருத்தைப் பேசுகிறார். வேதங்கள் அவன்பால் அணுகாததில் புதுமையொன்றும் இல்லை. வேதங்களை ஒதிக் கொண்டிருக்கும் நான்முகனும், அவன் தந்தையாகிய நாரணனும்கூட அவனைக் கண்டதில்லை.