பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 திருவாசகம் சில சிந்தனைகள்-5 j கோகழி என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் தானே வந்து என்னை ஆட்கொண்டான். மாலும் அயனும் வேதமும் காணமுடியாத ஒரு பொருள் தானே வந்து என்னை ஆட்கொண்டது என்றால், அந்த உபகாரத்திற்கு என்ன கைம்மாறு செய்யமுடியும்? நெஞ்சமே! உன்னிடம்தானே அவன் வந்து தங்கினான். எனவே, என்ன கைம்மாறு செய்யமுடியும் என்தை நீயே உரைப்பாயாக!” என்கிறார். 629. உள்ள மலம் மூன்றும் மாய உகு பெரும் தேன் வெள்ளம் தரும் பரியின் மேல் வந்த- வள்ளல் மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக் கருவும் கெடும் பிறவிக் காடு 2 ‘பரியின்மேல் வந்த வள்ளல் என்மாட்டு இரண்டு காரியங்களைச் செய்தான். ஒன்றைப் போக்கினான். அது யாதெனில் என்னைப் பற்றியிருந்த ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் போக்கினான். அவற்றைப் போக்கிய இடம் வெறுமையாக இருந்துவிடாதபடி இரண்டாவது ஒரு காரியத்தைச் செய்தான். அவனுடைய திருவருளாகிய தேன் குபுகுபு என்று பாய்ந்து வெள்ளமாக என் உள்ளத்தில் நிரம்புமாறு செய்தான். இவற்றைச் செய்தவன் யார்? பரிமேல் வந்த வள்ளல். பரியின்மேல்வந்தவன் என்பால் அணுகி அரசன் முதலானவர் இடையில் இருக்கையில் என்னைத் தனியே பிரித்து இவற்றைச் செய்யவில்லை. என்ன ஆச்சரியம்! அந்த வள்ளலைக் கருத்து ஒருமித்து என் கண்களால் கண்டவுடனேயே இவ்விரு செயல்களும் நிகழ்ந்துவிட்டன. வினை கழலுவது என்பது அவ்வளவு எளிதான காரியமன்று. பல பிறவிகளில் பல்வேறு வகையாகத் தவம் முயன்று பல்வேறு செயல்களைச் செய்து இவற்றைக் கழற்ற முயல்வோர் உலகிடை உண்டு. இவ்வளவு பெரிய