பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 திருவாசகம் சில சிந்தனைகள்-5 கவனிக்காமல் இருந்திருக்கலாம். ஆழ்ந்து சிந்தித்தால் இவை இரண்டிற்குமுள்ள வேறுபாடு புலப்படுவதுடன் ஒரு சிறப்பான உண்மையையும் இவ்வேறுபாடுகள் தெரிவிப்பதைக் காணமுடியும். திருப்பெருந்துறையில் குருநாதரைச் சந்திக்கின்ற வரையில், திருவாதவூரருக்கு யாரையும் ஊடுருவிக் காணுகின்ற ஆற்றலோ, அவர் யார் என்ற உண்மையைத் தெரிந்துகொள்ளும் ஆற்றலோ இல்லை. அந்த விநாடி வரையில் அவருடைய பார்வை சராசரி மனிதர்களுடைய பார்வைதான். எதிரேயுள்ள மனிதரையோ விக்கிரகத்தையோ ஊடுருவிப் பார்த்து இந்த உருவ வடிவங்களுக்கு அப்பாலுள்ள உண்மையென்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆற்றல் அவர்பால் அதுவரை இல்லை. ஆண்டுகொண்டதன் மூலம் அந்த ஆற்றலைக் குருநாதர் அவருக்கு அருளினார். அந்த விநாடியிலிருந்து அடிகளாரது பார்வை முற்றிலும் மாறிவிட்டது. 'குலாவு தில்லை கண்டேனே' (479) அணிகொள்தில்லை கண்டேனே' (477) என்பவற்றிற்கு இந்த அடிப்படையை மனத்துட் கொண்டு பொருள் காண வேண்டும். அதாவது, திருவாதவூரராக இருந்தபோது தில்லைக்கூத்தனை ஐம்பொன் சிலையாகத்தான் கண்டிருப்பார்; கூத்தன் நடனத்தில் ஒரு விநாடிநேரம் நிகழ்கின்ற ஒரு பாவத்தைத் (நிலையைத்)தான் ஆனந்த தாண்டவச் சிலை காட்டி நிற்கின்றது. குலாவுதில்லை கண்டேனே (479) என்று அடிகளார் பாடுகையில் அவர் விக்கிரகத்தைக் காணவில்லை. 'எண்தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னுடைய தாண்டவத்தை நேரடியாகக் காணும் வாய்ப்பை அளித்தான். 3. தேவார மூவர் முதலிகள் தில்லையில் கண்டது அடிகளார் கண்ட காட்சியைப் போன்றதேயாகும்.