பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டு ஆய_நான்மறை_121 காரியத்தில், என்னுடைய செயற்பாடு என்று சொல்லக்கூடிய எதுவுமில்லாமல் பரிமேல் வந்த சேவகன் போகிற போக்கில் இதனைச் செய்துவிட்டான். வழியோடு சென்ற என்னைப் பெருந்துறைக் குருநாதர் இழுத்துப் பிடித்து இதனைச் செய்தார். இதன் எதிராகப் பரிமேல் வந்த சேவகனார் என்னை இழுக்கவும் இல்லை; பிடிக்கவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் குறிப்பாக என்னைப் பார்த்தாரா என்றுகூடச் சொல்ல முடியாது. ஆனால், சேவகனாரை நான் கண்டவுடன் மேலே சொல்லிய இரண்டு செயல்களும் நிகழ்ந்துவிட்டன. என்கிறார். இந்த அனுபவத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு உலக மக்களுக்கு ஒரு சிறந்த உபதேசம் செய்கிறார் அடிகளார். 'யார் யார் பிறவியை வேரொடும் வேரடி மண்ணோடும் தொலைக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அவர்கள் அனைவரும் பெருந்துறைக் கோனை வாழ்த்தி வழிபடுங்கள் என்கிறார். 630. காட்டகத்து வேடன் கடலில் வலை வாணன் நாட்டில் பரிப்பாகன் நம் வினையை. வீட்டி அருளும் பெருந்துறையான் அம் கமல பாதம் மருளும் கெட நெஞ்சே வாழ்த்து 3 'நெஞ்சமே! குருநாதராக எழுந்தருளி உனக்கு அருள் செய்தவன் யாரென்று தெரியுமா? பெருந்துறை நாயகன் என்றுமட்டுந்தானே நீ நினைக்கிறாய்! ஆனால், அருச்சுனன் பொருட்டு வேட்டுருக் கொண்டு காட்டில் அலைந்தான்; நந்தி சாபத்தைத் தீர்த்தற்காக வலைஞன் வடிவெடுத்துக் கடலில் வலைவீசினான்; மதுரையம்பதியில் குதிரைச் சேவகனாகத் தெருக்களைச் சுற்றிவந்தான் அவன். வேண்டிய இடத்தில் வேண்டுருக் கொண்டு பல்வேறு வகைப்பட்ட செயல்களைச் செய்யும் பெருந்துறை நாயகனுடைய கமல பாதங்களை நீ தொழுவாயாக,