பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 திருவாசகம் சில சிந்தனைகள்-5 அவ்வாறு செய்வாயேயாயின் அம்பு எய்து பன்றியைக் கொன்றதுபோல நீ செய்த வினைகளை அழித்துவிடுவான். வலை வீசி மீனைப் பிடித்ததுபோலத் தன்னுடைய அருட்பார்வையாம் @lgö}gl)@ll_f வீஇ உன்னுடைய அஞ்ஞானத்தையும் அகப்படுத்திவிடுவான். ‘எங்கோ இருக்கும் ஒருவன் யாருக்காகவோ குதிரைமேல் ஏறிவந்தான் ஆதலின் உனக்கும் அருள்வான்' என்றபடி 631. வாழ்ந்தார்கள் ஆவாரும் வல் ിജങ്ങബ്രു மாய்ப்பாரும் தாழ்ந்து உலகம் ஏத்தத் தகுவாரும் சூழ்ந்து அமரர் சென்று இறைஞ்சி ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை நன்று இறைஞ்சி ஏத்தும் நமர் 4 'திருப்பெருந்துறைக்குச் சென்று அந்த நாயகனை உடலாலும் மனத்தாலும் இறைஞ்சி, அவன் புகழை நாவார ஏத்தும் நம்மவர்களே! மறுமையில் உங்களுக்கு வீடுபேறு கிட்டும் என்பது ஒருபுறம் இருக்க, இந்த உடலோடு இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது என்ன பயன் கிட்டும் என்று நினைக்கிறீர்களா? இதோ சொல்கிறேன். 'மனித வாழ்க்கையில் ஒரு குறிக்கோளுடன் வாழ்ந்தவர்கள் ஆவீர்கள்; இந்தப் பிறப்பில் இருக்கின்ற வரையில் நீக்க முடியாத சஞ்சித, பிராரத்துவ, ஆகாமிய வினைகளை மாய்ப்பீர்கள்; உலகத்தில் உள்ள ஏனையோர் உங்களிடம் வந்து தாழ்ந்து வணங்கும் தகுதியைப் பெறுவீர்கள்; என்கிறார். இம்மூன்றும் இம்மையில் கிடைக்கின்ற பயன்களாகும். 632. நண்ணிப் பெருந்துறையை நம் இடர்கள் போய் அகல எண்ணி எழு கோகழிக்கு அரசைப் பண்ணின் மொழியாளோடு உத்தரகோசமங்கை மன்னிக் கழியாது இருந்தவனைக் காண் 5