பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டு_ஆய நான்மறை_123 'கோகழியில் எழுந்தருளியிருக்கின்ற அரசனை, பண்போன்ற மொழியுடைய பெருமாட்டியுடன் உத்தரகோசமங்கையை விட்டு நீங்காதிருக்கின்றவனை, அங்கங்கே சென்றுதான் காணவேண்டுமென்பதில்லை. நெஞ்சே! நம் வினைகள் நம்மைவிட்டு நீங்கவேண்டுமேயானால் பெருந்துறையை நண்ணிக் காண்பாயாக’ என்கிறார். - 633. காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் எனப் பேணும் அடியார் பிறப்பு அகலக் - காணும் பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும் பிரியானை வாய் ஆரப் பேசு 6 இப்பாடல் எளிதாகப் பொருள் காணுமாறு இல்லை. மனித உடம்புடன் வாழ்பவர்க்கு ஐம்பொறிகள் என்ற கருவிகளும் நான்கு கரணங்களும் இவ்வுடம்புடன் இருந்து பணிபுரிகின்றன. இவற்றை உடையவன் ஆன்மிக வளர்ச்சி அடையாததால் இக்கருவி, கரணங்கள் சாதாரணப் பசுகரணங்களாகவே உள்ளன. அவை அவ்வாறு இருப்பதால் பிராரத்துவ வினையை நுகரும் காலத்தில்கூடத் தாம் செய்த வினைப்பயனால் இது நிகழ்ந்தது என்று வருந்துவர் ஒரு சிலர்; ஏனையோர் பிறர் தந்த துன்பத்தால் இது நிகழ்ந்தது என்று கருதி அவர்மேல் வருந்துவர். இந்த வருத்தம் இப்பிறப்பில் செய்யப்படுகின்ற ஆகாமிய வினையாய் மறுபிறப்பிற்கு வித்தாகிறது. இதற்கு மறுதலையாக, அடியார்கள் என்பவர்கள் பிராரத்துவ வினையால் தமக்கு நிகழ்பவற்றைக்கூட, அவன் செயல் என்று கருதி, அதனைப் பேரின்பமாகவே நினைந்து போற்றுவர். அதன் பயனாக, ஆகாமிய வினை வருதல் இல்லாமலேயே போய்விடுகிறது. இத்தகையோர்க்கு மறுபிறப்பு இல்லை என்பது ஒருதலை. இதனையே