பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124_திருவாசகம்-சில சிந்தனைகள்-5 அடிகளார், காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பமென, பேணும் அடியார் பிறப்பகல’ என்று கூறுகிறார். 634. பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய்ப் பேச்சு இறந்த மாசு இல் மணியின் மணி வார்த்தை- பேசிப் பெருந்துறையே என்று பிறப்பு அறுத்தேன் நல்ல மருந்தின் அடி என் மனத்தே வைத்து 7 பாடலின் முதலடி பேசும் பொருளுக்கு இலக்கிதமாய்” என்றுள்ளது. பேச்சு என்பது சொல்வடிவமாகும். அந்தச் சொற்கள் வெறும் ஒசையளவாய் நில்லாமல் ஒரு பொருளைக் குறிப்பனவாகவே உள்ளன. இதனையே தொல்காப்பியனார், ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே தொல்சொல். பெயர். என்கிறார். பல்வேறு வகைப்பட்ட சொற்கள், பல்வேறு வகைப்பட்ட பொருள்களைக் குறிக்கின்றன. இப்பொருள்கள் பல்வேறு வடிவுடனும் பல்வேறு திறத்துடனும் இருப்பினும் அவை அனைத்தும் அணுக்களின் சேர்க்கையே என்பது நாமறிந்த ஒன்று. இந்த அணுவும் அணுவைவிடச் சிறிதாக இருக்கின்ற ஒன்றும், அவனே என்பதை 'அணுத்தரு தன்மையில் ஐயோன் காண்க 3; 45) என்று முன்னரே அடிகளார் குறித்துள்ளார். ஆதலால், பொருளுக்கு இலக்கிதமாய் இலக்கியமாய் உள்ளவன் அவனே என்ற கருத்தையே பேசும் பொருளுக்கு இலக்கிதமாய் என்றார். பேச்சிறந்த மாசில் மணி என்பது - அடுத்து நிற்பதாகும். நுண்ணிய அணுவாய் இருந்தாலும், மிகப் பெரிய மலையாய் இருந்தாலும் ஒரு வடிவு பெற்றிருக்கின்ற வரையில் அதற்கென ஒரு பெயர் உண்டு. அணுத்தன்மைவரையில் அதற்கு அணு என்ற பெயர் உண்டு. அதையும் கடந்து சிறிதாய், சக்தியே வடிவாய் இருக்கும் ஒன்றுக்கு இன்று பலபெயர்கள் தரப்படினும்