பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டு ஆய_நான்மறை_125 எலக்ட்ரான், பொசிட்ரான், மீசான் அவற்றையும் கடந்து நிற்பவன் இறைவன் ஆதலாலும், அவன் சொல்லுக்குள் அடங்காதவன்; ஆதலாலும், பேச்சிறந்த மாசில் மணி' என்றார். 'மாசில் மணி’ என்பது அவனுடைய பெயர் அன்று. நாம் சொல்லும் மாசில் மணி போன்றவன் என்ற உவமையளவில் மாசில்மணி நிற்குமே.தவிர, அதை அவனுடைய பெயராகக் கொள்ளக்கூடாது. இறைவன் ஆகிய பொருளுக்குத்தான் பெயரோ, உருவோ வடிவோ இல்லையே தவிர அந்தப் பொருளை மனத்திலிருத்திக்கொண்டு அதைப்பற்றி நாம் என்ன பேசினாலும் அதனை 'மணிவார்த்தை' என்கிறார் அடிகளார். 'குருந்தமரத்தடியில் இருந்த குருநாதரின் திருவடிகளைப் பிறவிக்கு மருந்தாக என் உள்ளத்துள் பொதிந்தேன் ஆதலின், என் பிறப்பை அறுக்கும் ஒர் அற்புதமும் நடைபெற்றது என்கிறார். இதனையே நல்ல மருந்தின் அடி என்மனத்தே வைத்துப் பிறப்பு அறுத்தேன்’ என்கிறார். மருந்தில் இரு வகை உண்டு. வேம்பும், கடுவும் போன்ற சில மருந்துகள் உண்ணும்பொழுது பெருவெறுப்பைத் தந்து பின்னர் நலம் பயக்கும். இதன் எதிராகத் தேன் போன்ற சில மருந்துகள் உண்ணும்போதும் சுவை தந்து பின்னரும் நலம் பயத்தலின் அவை அனைவரும் விரும்பி உண்ணும் நல் மருந்தாயின. அதுபோலப் பெருந்துறையான் திருவடியை மனத்தில் வைக்கும்பொழுதும் ஆனந்தம், பின்னர்ப் பிறப்பு அறுத்தலாகிய பின்விளைவும் ஆனந்தமே. ஆதலின் அதனை நல்ல மருந்து என்றார். ওঁ ওঁ ওঁb