பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-திருப்படை ஆட்சி உ12 திருப்படை என்று யாரோ தலைப்புத் தந்தமையால் இது அடியார் கூட்டத்தைக் குறிக்கும் என்றும் பொருள் கொண்டுள்ளனர். இவ்வாறன்றிப் படை ஆட்சி என்று வைத்துக்கொண்டு, படைகளை ஆளும் தன்மை என்று பொருள்கூறலாமோ எனத் தோன்றுகிறது. படைகளுக்கென்று ஒரு தனித்தன்மையுண்டு. எந்த ஒரு படைக்கலமும் பகைவர்களை வென்று, நன்மையையும் செய்யும்; தன்னை ஏந்தியவர்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் கவனக்குறைவு காரணமாகத் தீமையையும் விளைக்கும். எனவே படைகளை வைத்திருப்பவனுக்கு அவற்றை முறையறிந்து ஆளுந்தன்மை மிக இன்றியமையாததாகும். இன்றேல் அப்படைகள் அவனுக்கும் அவனை அண்டியவர்களுக்கும் ஊறே செய்யும். இவற்றையெல்லாம் மனத்துட் கொண்டு படைகளை ஆளும் தன்மைபற்றி இப்பதிகம் பேசுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இரண்டாம் பாடலின் முதலடியில் ஐந்தினொடு ஐந்து' என்ற தொடரால் கன்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றார். இவற்றை விரிவுபடுத்தி, கண்கள் முதற்பாடலிலும் (635) மூன்றாம் பாடலிலும் (632) கைகள், வாய் என்பன ஆறாம் பாடலிலும் (640 மணியோசை முரன்றெழும் ஓசை' என்பவற்றால் காதுகள் ஏழாம் (64) எட்டாம் (642) பாடல்களிலும் குறிக்கப்பெறுகின்றன. இவற்றைப் படைகள் என்று கூறுவதில் தவறொன்றும் இல்லை. இப்படைகளை அடக்கி ஆளும் முறையில், கண் இறைவன் திருவடிகளைக் காணவும், வாய் அவன் புகழைப் பேசவும், காதுகள் அவனுக்கு இசைக்கப்படும் மணியோசை போன்றவற்றைக் கேட்கவும், கைகள் அவன் திருவடிகட்கு மலர் துவவும் பயன்படுமேயானால் இப்படைகளை அடக்கி ஆண்டதாக முடியும். அவ்வாறின்றி இப்பொறிகளை அடக்கமுடியாமல் அவை தறிகெட்டுப்