பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 திருவாசகம் சில சிந்தனைகள்-5 போகுமாறு விட்டுவிட்டால் படைகளை ஆளும் தன்மை இழக்கப்பெறும். படையாட்சி என்ற தலைப்பை இந்த அடிப்படையில் யாரோ இட்டிருக்க வேண்டும். அதனைப் புரிந்துகொள்ளாத பிற்காலத்தார், திருவாசகத்தில் வரும் தலைப்புக்கள் என்ற காரணத்தால் ஒரு திரு வைப் படைக்கு முன்னர்ச் சேர்த்துவிட்டனர் போலும். வெண்பாவிற்கு முன்னர்த் திருவைச் சேர்த்துத் திருவெண்பா' என்று பெயர் சூட்டியதும் இதேபோன்றுதான். - ஒவ்வொரு பாடலிலும் வரும் ஆகாதே’ என்ற சொல் ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும். ஆகாது என்ற எதிர்மறைப் பொருளையும் ஆகும் என்ற உடன்பாட்டுப் பொருளையும் தேவைப்பட்ட இடங்களில் ஏற்றுக்கொள்ளுதல் பொருத்தமுடையதோ என்று தோன்றுகிறது. 'சீவ உபாதி ஒழிதல்' என்ற உட்தலைப்பு என்ன பொருளைத் தருகிறது என்பது விளங்கவேயில்லை. 635. கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகையார்கள்தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடும் ஆறு மறந்திடும் ஆகாதே மால் அறியா மலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே பண் களிகூர்தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாதே பாண்டி நல் நாடு உட்ையான் படை ஆட்சிகள் பாடுதும் ஆகாதே விண் களி கூர்வது ஒர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே