பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்படை ஆட்சி-129 மீன் வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே f இரண்டு கண்களும் அவன் திருவடிகளைக் கண்டு களிப்பதற்குரியனவாகும். இங்கு ஆகாதே’ என்ற சொல் ஆகமாட்டாவா என்ற எதிர்மறை வினாவாக அமைந்து, ஆகும் என்ற பொருளைத் தந்துநிற்கிறது. ‘கண்கள் இரண்டும்’ என்பதிலுள்ள உம்மையை முற்றும்மை என்று கொள்ளாமல், இறந்தது தழுவிய எச்ச உம்மையாகக் கொண்டு, கண்கள் காண்பதற்கு அடிப்படை உதவி புரிகின்ற மனம் என்ற ஒன்றையும் சேர்த்துப் பொருள் கொள்ளுதல் நலம். இரண்டு கண்களும் மனமும் அவன் திருவடிகளைக் கண்டு களிப்பதற்கு உரியனவாகும். இது எளிதாக நடைபெறுவது ஒன்றன்று. மனம், மொழி, மெய் கடந்து நிற்கின்ற ஒருவனை, இந்தக் கண்களோ மனமோ தேடிச்சென்று காண்டல் இயலாத காரியம். எனவே, காண்பதற்குரிய வாய்ப்புக் கிட்டியதைப் பாடலின் பிற்பகுதியில் அடிகளார் விளக்குகின்றார். மீன்வலை வீசிய கானவனாக அவன் வெளிப்பட்டான் என்றால், அவனுடைய திருவடிகள் நிலத்திலும் நீரிலும் தோய்ந்து நிற்றல் ஒருதலை. எனவே, கண்களிரண்டும் அத்திருவடிகளைக் கண்டு களித்தல் எளிது. 'மீன்வலை வீசிய கானவன்' என்றதால், மீன் பிடிக்கும் தாழ்ந்த தொழிலைச் செய்பவன் என்று கருதிவிட வேண்டா என்று கூறுவதற்காகக் கானவன் என்ற சொல்லின் முன்னரேயே மாவறியா மலர்ப் பாதம்’ என்றார். அந்த மலர்ப்பாதங்களைக் கண்ணும், மனமும் கண்டு களிக்கும்போது, தம்மையும் அறியாமல் சில மாற்றங்களும் நிகழ்ச்சிகளும் காண்பவர்களிடம் தோன்றுமென்பதைக் ‘களிகூர்தரு பண்களோடு பாடலொடு 6-ایچےi( பயின்றிடுதல் ஆகும் என்கிறார். -