பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 திருவாசகம் சில சிந்தனைகள்3 இவ்வாறு வெளிப்பட்ட அம்மலர்ப்பாதத்தைக் கண்களால் கண்டு, பாடலொடு ஆடல் நிகழவேண்டும். அஃதின்றேல் அந்த வாழ்வு, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று திரியும் சில காரிகையார் வாழ்வில் அகப்பட்டுக்கொண்டு, வெளியேற முடியாமல் இறுதியில் அவர்கள் வாழ்வைவிடக் கடைப்பட்டதாகிவிடும். மேலே கூறியபடி காணுதலும் ஆடுதலும் நடைபெற வில்லையானால் இப்பிறவி நீங்குவதற்குப் பதிலாக மறுபடியும் வந்து பிறத்தல் உறுதி என்பதை அறிவிக்கப் 'பிறந்திடுமாறு மறந்திடும் ஆகாதே’ என்றார். மண்களில்’ என்ற பன்மை வாய்பாட்டை உபயோகப்படுத்தியதன் மூலம் மண்ணுலகம், நாகலோகம் முதலியவற்றைக் குறித்தாராயிற்று. வேதகம்’ என்ற சொல், மட்டமான உலோகத்தைப் பொன்னாக மாற்றும் இரசவாதவித்தையைக் குறிப்பதாகும். கடைப்பட்ட ஆன்மாக்களும் கடைத்தேற அவன் உதவுகின்றான் ஆதலின், வேதகம்’ என்று இறைவனை இங்கே கூறினார். - 'விண்களி கூர்வதோர் வேதகம்’ என்று வருதலின் விண் என்ற சொல் தேவருலகம் என்ற வாலாயமான பொருளைத் தராமல், அண்டம் அல்லது பிரபஞ்சம் என்ற பொருளைத் தந்து நிற்கின்றது. இவன் வெளிப்படுதலால் பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்களும் உய்கதி அடைகின்றன. எனவேதான் விண்ணுக்கு வேதகம் என்றார். இப்பாடல் முழுவதிலும் ஆகாதே என்ற சொல் ஆகும் என்ற உடன்பாட்டுப் பொருளிலேயே வருதல் காண்க. 636. ஒன்றினொடு ஒன்றும் ஒர் ஐந்தினொடு ஐந்தும் உயிர்ப்பதும் ஆகாதே உன் அடியார் அடியார் அடியோம் என உய்ந்தன ஆகாதே