பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலாப் பத்து 5 கண்ட பத்தில் பேசப்பெற்றதற்கு அடுத்த நிலை குலாப் பத்தில் பேசப்பெறுகிறது. விக்கிரக வடிவைத் தாண்டி நேரிடையாகப் புறக்கண்ணால் அவனைக் காணும் வாய்ப்பைப் பெற்றதுபோல் இப்பொழுது' அவனைத் தம் உள்ளத்துள் ஆவாஹனம் செய்துகொள்ளும் நிலை தோன்றிவிட்டது. ஆதலின், 'குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. (விளங்குகின்ற தில்லையம்பதியில் ஆடிக் கொண்டிருக்கும் பெருமானை என்னை ஆட்கொண்டவனை, என் உள்ளத்துள் ஆவாஹனம் செய்துகொண்டேன்) என்ற முறையில் பாடிச் செல்கிறார். குலாப் பத்தின் தனிச்சிறப்பு இதுவேயாம். ‘அனுபவம் இடையீடுபடாமை என்ற உட்தலைப்பு வழக்கம்போல் பொருத்தமில்லாமல் கூறப்பட்ட ஒன்றாகும். திருப்பெருந்துறையில் அடிகளார் பெற்ற அனுபவம் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்ததால்தான் திருவாசகம் வெளிவர முடிந்தது என்பதைத் தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறோம். அந்நிலையில் இப்பதிகத்தில் அனுபவ இடையிடுபற்றி எங்கும் பேசப்பெற்றதாகத் தெரியவில்லை. எனவே, இந்த உட்தலைப்பின் பொருத்தமின்மையை அறியலாம். 559. ஒடும் கவந்தியுமே உறவு என்றிட்டு உள் கசிந்து தேடும் பொருளும் சிவன் கழலே எனத் தெளிந்து கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்து அடியேன் ஆடும் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 1 ‘விளங்கும் தில்லைப்பதியின்கண் எப்பொழுதும் ஆடிக் கொண்டிருக்கும் எங்கள் பெருமானை என்னுடைய உள்ளத்தில் முழுவதுமாக இருத்திக்கொண்டதால் என்ன விளைவுகள் நிகழ்ந்தன தெரியுமா? அமைச்சராக இருந்தபொழுது பட்டாடை உடுத்தினேன். பொற்கலத்தில் உண்டேன். இப்பொழுது அவை என்னை