பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்படைஆட்சி_131 கன்றை நினைந்து எழு தாய் என வந்த கணக்கு.அதும் ஆகாதே காரணம் ஆகும் மனஆதி குணங்கள் & கருத்து உறும் ஆகாதே நன்று இது தீது என வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே நாமும் மேல்.ஆம் அடியாருடனே செல நண்ணுதும் ஆகாதே என்றும் என் அன்பு நிறைந்த பரா அமுது எய்துவது ஆகாதே ஏறு உடையான் எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே 2 இடபத்தில் ஊர்கின்ற பெருமான் தம் நெஞ்சுள் புகுந்துவிட்டால் என்ன நடைபெறும் என்பதை அடிகளார் வரிசைப்படுத்திப் பேசுகிறார். உடல் உயிர் கன்மேந்திரியங்கள். ஞானேந்திரியங்கள் ஆகியவை செயலிழந்துவிடும். அவனுடைய அடியார்களுக்கு அடியார்களாகத் தாம் ஆகிவிட்டால் உய்வது உறுதி என்கிறார். உய்வன என்ற எதிர்காலத்தைக் குறிக்கும் சொல் உறுதி நோக்கி உய்ந்தன என இறந்தகாலம் ஆயிற்று. வாக்கு மனோலயம் கடந்த பொருள் திருப்பெருந்துறையில் குருநாதர்வடிவில் வந்ததன் அடிப்படை என்ன ? தன்னால் படைக்கப்பட்ட உயிர்களின் துன்பத்தைப் போக்கக் கன்றை நினைந்து வரும் பசுவின் நிலையாகும் அந்த வரவு. இவ்வாறு குருநாதர் வடிவில் வந்தவன் தாய்ப்பசுவினைப் போன்று அன்பு நிறைந்தவன். அவன், அகில பிரபஞ்ச காரணன் ஆவான். அவனே காரணன் என்றாலும் அவனை உயிர்கள் அறியம்ாட்டா. ஆனால், அவன் அடிகளாருள் நுழைந்ததால் அவனே அநாதி