பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 திருவாசகம்-சில சிந்தனைகள்-5 என்றும், அனைத்திற்கும் காரணனாக இருப்பவன் என்றும் அவரால் உணரமுடிந்தது. அவன் நுழைவதற்கு முன்னர் எந்த ஒன்றையும் இது நல்லது, இது கெட்டது என்று பிரித்தறியும் மனநிலை இருந்தது. நன்று இது தீது இது எனக் கூறிய பிறகு என வந்த நடுக்கம்’ என அடிகளார் கூறுகிறார். எந்த ஒன்றும் நன்று என்றோ தீது என்றோ முடிவு செய்வதால் அவற்றிடையே முறையே விருப்பும் வெறுப்பும் தோன்றுகின்றன. இந்த விருப்பு வெறுப்புகளே சமநிலையை நோக்கிச் செல்லும் ஆன்மாவிற்கு முட்டுக்கட்டையாக அமைகின்றன. இந்தக் கருத்தையே என'என்ற சொல்லால் பெறவைக்கிறார். நன்று என தீது என மாறுபடுத்திப் பார்ப்பதையும் அதன் விளைவையும் கண்டு நடுங்குகிறேன் என்கிறார். அவன் உள்ளே புகுந்ததால் மேலே கூறிய செயல்கள் நிகழ்ந்துவிட்டன. நன்று, தீது என்ற வேறுபாடு இன்மையின் சமதிருஷ்டி நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே திருப்பெருந்துறையில் கண்ட பழைய அடியார்களோடு தாமும் சென்று சேர்ந்து, அவர்கள் செல்லுமிடத்திற்கு செல்லலாம் என்கிறார். இப்பாடலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இதுவரை திருப்பெருந்துறை அடியார்களோடு செல்ல முடியாமைக்குக் காரணம், தம்முடைய இந்தச் செடிசேர் உடலம்தான் என்று பேசிவந்த அடிகளார், இப்பொழுது அங்கே போகத் தடையில்லை என்று பேசுகிறார். திருப்பெருந்துறை அனுபவத்திற்கு முன்னர்ச் செடிசேர் உடலமாகக் காட்சியளித்த இந்த உடம்பு, அதனோடு கூடிய உயிர் என்ற இரண்டும் இப்பொழுது அடைந்து விட்ட நிலையை இப்பாடல் முழுவதும் விவரிக்கின்றது.