பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்படை ஆட்சி_133 உடம்பை வைத்துக்கொண்டே இந்த நிலையை அடைந்துவிட்டமையின் திருப்பெருந்துறை அடியார்களுடன் சிவபுரத்தை நண்ணுவது ஆகும் என்ற உறுதிப்பாட்டுடன் பேசுகிறார். இந்தப் பாடலைப் பார்த்த பிறகு, இது, யாத்திரைப் பத்தை அடுத்து, அச்சோப் பதிகத்தின் முன்னர் இருக்கவேண்டிய ஒரு பகுதியாகும் என்பது தெளிவாகிறது. இப்பாடலிலும் ஆகாதே’ என்ற சொல் ஆகும் என்ற பொருளிலேயே வழங்கப்பெற்றுள்ளது. 637. பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே பாவனை ஆய கருத்தினில் வந்த பா அமுது ஆகாதே. அந்தம் இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே ஆதி முதல் பரம் ஆய பரம் சுடர் அண்ணுவது ஆகாதே செம் துவர் வாய் மடவார் இடர் ஆனவை சிந்திடும் ஆகாதே சேல் அன கண்கள் அவன் திருமேனி திளைப்பன ஆகாதே இந்திர ஞால இடர்ப் பிறவித் துயர் ஏகுவது ஆகாதே என்னுடை நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே 3 எம் தலைவனும் ஈசனுமாகிய அவன் என்முன் எதிர்ப்படுவானேயானால் பிற்கூறியவை நிகழுமென்க உயிரைப் பற்றிநின்று பல்வேறு குணவேறுபாடுகளை ஏற்படுத்தி, இந்த உயிரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திடும் இந்தப் பந்தமும் முக்குணங்களும் எம்மிடம் முன்நிற்க ஆற்றாது திரும்பிச் சென்றுவிடும்.