பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 திருவாகும் சில சிந்தனைகள் 5 இந்த அடிப்படையில், பாடுபவர் யாராக இருப்பினும் ஆண் பெண் வேறுபாடு கற்பிக்காமல் அகப்பொருள் இலக்கணத்தை ஒட்டிப் பாடிச்செல்லும் மரபைக் காண்கிறோம். இங்கு அடிகளார் தம்மைப் பெண்ணாகப் பாவித்துக்கொண்டு இப்பாடலைப் பாடுகிறார் என்று கொள்ளலாம். ஈசன் என்முன் எழுந்தருளப் பெற்றால், என் மார்புகள் அவனுடைய மார்புடன் இணைந்து இன்புறுதல் ஆகும். அவ்வாறு அவனைப் புல்லுகையில் மனம், உடல் என்பவை இன்புறுதல் போக, அவனுடைய பெருங்கருணைத் தடங்கடலில் துளையமாடுதலும் ஆகும். அந்த நிலையில் அவனுடைய சிலம்பிலிருந்து புறப்படும் ஒலி என் புறச் செவிகளுக்குக் கேளாமலும் என் உள்ளத்தின் உள்ளே சென்று ஒலிக்கும். அவன் அணிந்த திருநீறு என்மேலும் படும். அவனோடு சதா சர்வ காலமும் உடனிருக்கும் அடியார்கள், அவன் பொருட்டுச் செய்யும் பணிகளில் நான் செய்யும் சிறுபணியும் முன்னுற வந்துநிற்கும். இவை அனைத்தும் நடைபெற்றபோதிலும் மறைகள் காணவேண்டி ஒலமிடும் அவனுடைய திருவடியைத் தரிசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டும். அவனை புல்லுகின்ற காரணத்தால் அவன் அணிந்திருக்கின்ற செங்கழுநீர் மாலை என்னிடத்தும் பொருந்தும் என்க. 639. மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கு அறும் ஆகாதே வானவரும் அறியா மலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே கண் இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே காதல் செயும் அடியார் மனம் இன்று