பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்படைஆட்சி_137 களித்திடும் ஆகாதே பெண் அலி ஆண் என நாம் என வந்த பிணக்கு அறும் ஆகாதே பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே எண் இலி ஆகிய சித்திகள் வந்து எனை எய்துவது ஆகாதே என்னை உடைப்பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே 5 ஈசன் என்முன் எழுந்தருளுவானேயானால் இனிக் கூறப்பெறுபவை எளிதாக நடைபெறும் என்கிறார் அடிகளார். இம்மண்ணுலகில் வாழும் அனைவரையும் பிடித்தாட்டும் மாயை, அதனால் ஏற்படும் மனக் குழப்பம் என்பவை மறைந்துவிடும். வானவரும் காண இயலாத அவனுடைய மலர்போன்ற திருவடிகளை நேரடியாகக் காணும் வாய்ப்புக் கிட்டும். கண்ணில்லாதவனாகிய காலதேவன் நமக்கு அளிக்கும் இறப்பு என்ற ஒன்றைக் கண்டு மனம் மறுகும் நிலைமை மாறிவிடும். பிற உயிர்கள்மாட்டும் يFeg; அடியார்கள்மாட்டும் அன்பு செய்கின்ற அடியார்கள் தாம் வெளிப்படுத்தும் அன்பு காரணமாக, இறைவன் தம் முன்னர் வெளிப்பட்டான் என்று பெருமகிழ்ச்சியடைவர். 'நாம் என்ற தற்போதம் எம் உள்ளே இருக்கின்ற காரணத்தால், எம்மினும் வேறுபட்டு எதிரே நிற்பவர்களைப் பெண் என்றும் ஆண் என்றும் அலி என்றும் வேறு பிரித்துக் காண்கின்றோம். இறைவன் வெளிப்பட்ட காரணத்தால் முதலில் நாம் அழிகிறது. அது அழியவே பெண், ஆண், அலி என்ற மாறுபாடுகள் புலப்படாமல் போய்விடுகின்றன. 'நாம்: என்பது இலக்கங்களில் காணப்பெறும் ஒன்று என்ற எண்