பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iss • திருவாசகம் சில சிந்தனைகள் 5 போன்றதாகும். அதனை முன்னிறுத்திப் பூஜ்ஜியங்களைப் பின்னர்ச் சேர்த்தால் ஒன்று, பத்து, நூறு எனப் பெருகிக்கொண்டே செல்லும். ஒவ்வொரு பூஜ்ஜியமாக அழித்தாலும் தொகையின் அளவு குறையுமே தவிர முற்றிலும் இல்லாமற்போகாது. ஆனால், முதலிலுள்ள ஒன்று என்ற எண்ணை அழித்துவிட்டால் எஞ்சுவது எதுவும் இல்லை. அதேபோல நாம் என்ற ஒன்று: இருக்கின்றவரையில் பெண் என்றும் ஆண் என்றும் அலி என்றும் பிரிவினைகள் விரிந்துகொண்டே செல்கின்றன. இந்த 'நாம் அழிந்தால் பிரிவினைகளும் உடன் அழிந்துவிடுகின்றன. இறைவன் வெளிப்படும்போது நாம்: அழிவதால் பெண், ஆண், அலி என்ற வேறுபாடுகள் ஒழிகின்றன. இதனையே அடிகளார் பெண், அலி, ஆண் என நாம் என வந்த பிணக்கு அறும் என்கிறார். இப்பிறப்பிற்கு முன்னர் எடுத்த பிறப்புக்கள் எத்தனையென்று தெரியாது. ஒவ்வொரு பிறப்பிலும் அந்த அந்த உடம்பு ஒரு பெயரைத் தாங்கி இருந்திருக்கும். சங்கிலித் தொடர்போன்ற அந்தப் பிறப்புக்கள் அழிந்தொழிந்தன. கணக்கற்ற சித்திகள் நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என்னை வந்து அடையும் என்கிறார். 640. பொன் இயலும் திருமேனி வெண் நீறு பொலிந்திடும் ஆகாதே பூ மழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடும் ஆகாதே மின் இயல் நுண்இடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே வினை முரன்று எழும் ஒசையில் இன்பம் * மிகுத்திடும் ஆகாதே - தன்அடியார் அடி என் தலை மீது தழைப்பன ஆகாதே தான் அடியோமுடனே உய வந்து