பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்படை ஆட்சி_139 தலைப்படும் ஆகாதே இன்இயம் எங்கும் நிறைந்து இனிது ஆக இயம்பிடும் ஆகாதே என்னை முன் ஆளுடை ஈசன் என் அத்தன் எழுந்தருளப் பெறிலே ஈசனும் எந்தையுமாகிய இறைவன் என்முன் எழுந்தருளுவானேயாகில் பிற்கூறப்பட்டவை நிகழும் என்கிறார். பொன்போன்ற அவனுடைய திருமேனியில் வெண்ணிறு பொலிவதைக் காணமுடியும். மாதவர்கள் மலர்மழை பொழிவர். நுண்ணிய இடையினையுடைய மகளிரின் மனத்தின் ஆழத்தில் தோன்றும் கருத்துக்கள் வெட்டவெளிச்சமாக வெளிப்பட்டுத் தோன்றும். கடலின் ஆழத்தைக் கணக்கிட்டாலும் மகளிர் ஆழ்மனத்திலுள்ள எண்ணங்களை அறிதல் இயலாத காரியம் என்பது இன்றும் நம்மிடைப் பொதுவாக வழங்கும் ஒரு முதுமொழியாகும். எவ்வளவு நுண்ணறிவு உடையவர்களும், ஏன் அந்த மகளிரேகூட, அவர்களுடைய ஆழ்மனத்திலுள்ள எண்ணங்களை அறிதல் இயலாது என்பர். இந்த மகளிரையும் அவர்கள் மனங்களையும் படைத்த பரம்பொருள் எதிரே வந்து நிற்குமாயின் மகளிரின் ஆழ்மனக் கருத்துக்கூட வெளிப்பட்டு நிற்கும் என்கிறார் அடிகளார். இந்த நுண்மையான பொருளை அறியாத உரையாசிரியர் சிலர் கருத்து என்ற சொல்லுக்கு வஞ்சனை என்று பொருள்கூறிப் போயினர். அம்பிகையும் பெண்தான் என்பதை ஏனோ இவர்கள் மறந்தனர். சாதாரண நேரங்களில் வீனை வாசிப்பதைக் கேட்டால், அந்த இசை, சுரங்களின் இருப்பிடமாகக் காணப்பெறும். அசுத்தமாயா காரியமான இந்த உலகில் எழும் வீணையின் ஒலி புறக்காதுகளில் பட்டு உள்ளத்தைச் சென்று தைத்தாலும் அது ஒரளவே உணர்ச்சியைத்