பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140-திருவாசகம் சில சிந்தனைகள்-5 தூண்டும். அவ்வாறின்றி நாதத்திற்கே மூலமான, நாத சொரூபியான இறைவனே வெளிப்பட்டுநின்றால் அந்த இசை, சுரங்களுக்கு இருப்பிடமாவதன்றி எல்லையற்ற ஆனந்தத்தின் வெளிப்பாடாக மிளிரும். இதனையே அடிகளார் வீணை முரன்று எழும் ஒசையில் இன்பம் மிகுத்திடும் என்கிறார். இறைவன் வெளிப்படாதபோது வீணையின் முரன்று எழும் ஒசை, இன்பம் தரும் என்பது உண்மைதான். ஆனால், அவன் வெளிப்பட்டபோது இன்பம் மிகுத்திடும் என்பதால் அது வெறும் இன்பமாக இல்லாமல் ஆனந்தமாக மாறிவிடும் என்க. அவன் திருவடியே அல்லாமல் அவனுடைய அடியார்களின் திருவடியும் என் தலைமேலனவாகும். திருப்பெருந்துறையில் காட்சிகொடுத்ததுபோல நாம் உய்யும் வகையில் அடியார் கூட்டத்துடன் குருநாதர் இப்பொழுது வந்து காட்சி தருவார் என்பதைத் தான் அடியோமுடனே உய வந்து தலைப்படும்’ என்கிறார். இந்நிலையில் பலவகைப்பட்ட இசைக்கருவிகள் இன்னியம் இசைக்கும் G了余氹。 641. சொல் இயலாது எழு தூ மணி ஓசை சுவை தரும் ஆகாதே துண் என என் உளம் மன்னிய சோதி தொடர்ந்து எழும் ஆகாதே பல் இயல்பு ஆய பரப்பு அற வந்த பரா பரம் ஆகாதே பண்டு அறியாத பர அனுபவங்கள் பரந்து எழும் ஆகாதே வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாதே விண்ணவரும் அறியாத விழுப் பொருள் இப் பொருள் ஆகாதே