பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திருவாசகம் சில சிந்தனைகள்-5 விட்டு நீங்க, பிச்சையெடுக்கும் ஒடும், உடுத்துகின்ற ஒரேயொரு கோவணமும், கவந்தியும்) ஆகிய இரண்டுமே என்னைவிட்டு நீங்காமல் உள்ளன. பட்டுடுத்தியபோது இல்லாத ஒரு புதுமை, கோவணம் அணியும் இப்பொழுது என்பால் வந்து இணைந்துவிட்டது. அது என்ன தெரியுமா? அதுதான் உள்ளம் குழைந்து கசிதல் என்பதாகும். பட்டுடை உடுத்தியிருக்கின்ற காலத்தில் அதிகாரத்தை யும், வெற்றியையும் தேடிச்சென்று கொண்டிருந்தேன். கவந்தி அணிந்த காலத்தில் தேடப்படவேண்டியவை அதிகாரமோ வெற்றியோ அன்று; ‘சிவன் கழலே’ என்று தெளிந்தேன். அதன் பயனாக என்ன நிகழ்ந்தது தெரியுமா? ‘அதிகாரத்தையும், வெற்றியையும் தேடிச்சென்ற காலத்தில், ஓயாத மன உளைச்சல், கவலை, அமைதியின்மை என்பவற்றுடன் ஒரு சிறிய அளவு மகிழ்ச்சியும் ஏற்பட்டது உண்மைதான். 'ஆனால் இப்பொழுது தில்லைக் கூத்தனை என்னுள் ஏற்றுக்கொண்ட பிறகு என்ன நடந்தது என்பதை இதோ சொல்கிறேன். அடியேன் கூடும் (உடம்பும்) உயிரும் குமண்டையிட (கும்மாளமிடத் தொடங்கிவிட்டன. என்கிறார். - 560. துடி ஏர் இடுகு இடைத் தூ மொழியார் தோள் நசையால் செடி ஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் - முடியேன் பிறவேன் எனைத் தன. தாள் முயங்குவித்த அடியேன் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 2 மகளிர்பால் வைத்த ஈடுபாட்டால் எத்தனையோ பிழைகளைச் செய்திடினும் அவைபற்றிக் கவலைப்படாமல் என்னைத் தன் திருவடிகளோடு இணைத்துக் கொண்டவனை, குலாத் தில்லை ஆண்டானை உள்ளத்துட் கொண்டேன் ஆதலின் எனக்கு இறப்புமில்லை, பிறப்புமில்லை என்கிறார்.