பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்படைஆட்சி_14 எல்லை இலாதன எண் குணம் ஆனவை எய்திடும் ஆகாதே இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தருளப் பெறிலே 7 பிறைச்சந்திரனைச் சூடிய பெருமான் எங்களை ஆளும்பொருட்டு இங்கே வந்து தோன்றுவானாயின் பின்கூறப்பெற்றவை நிகழும் என்கிறார் அடிகளார். சொல் அற்ற இடத்து சித்தத்தினுள்ளே எழும் தூய்மையான சிலம்பொலி ஆனந்தத்தைப் பெருக்கும். (சுவை தரும்) 'சொல் இயலாது” என்பது அதிர்வுகளால் உண்டாகும் ஒசையோடுகூடிய சொல்லைக் குறிக்கும். இந்தச் சொல்லின்வழியே எண்ணமும் தோன்றுதலால் சொல்லைக் கடந்த ஒன்று என்று அடிகளார் கூறும்பொழுது, சொல்லின் வடிவாக மனத்தின் அடித்தளத்திலிருக்கும் ஒலி, அது வைகரி, வையைந்தி என்பவற்றின் உதவியுடன் ஒசையாக வெளிப்பட்டு நிற்கும் நிலை என்ற இரண்டையும் குறிக்கின்றார். சொல் இயலாது என்ற ஒரே தொடரில் சொல், எண்ணம் என்ற இரண்டையும் கூறினாராயிற்று. இவை இரண்டும் முற்றிலும் அடங்கியபொழுது கூத்தனின் சிலம்பொலியை உள்ளே கேட்கமுடியும். அந்த ஒலி எல்லையில்லாத ஆனந்தத்தை விளைவிக்கும். "எதிர்பாராமல் என் உள்ளத்தில் திடீரென்று புகுந்த அந்த ஒளி இடைவிடாமல் உள்ளே ஒளிர்ந்துகொண்டே இருக்கின்றது என்பதை துண் என என் உளம் மன்னிய சோதி தொடர்ந்து எழும் என்று குறிப்பிடுகிறார். மனத்தின் இயல்பு மிக விரைவாகப் பல்வேறுபட்ட, ஒன்றுக்கொன்று முரணான, எண்ணங்களைத் தோற்றுவித்துக்கொண்டேயிருத்தலின் அதனைப் 'பல் இயல்பு ஆய பரப்பு' என்றார். அந்தப் பல்லியல்பும், பரப்பும் அற்றுப்போனால் அங்கே பராபரம் தோன்றும்.