பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்படை ஆட்சி_143 தோற்றமும் முடிவும் இல்லாத மறையோனாகிய பெருமான் அடியேனை ஆள்வதற்காக மானிட வடிவு தாங்கி எழுந்தருள்வானேயானால் என்ன என்ன நிகழும்? இந்த உலகத்தில் தோன்றி எழும் ஒசைகளெல்லாம் அடங்கிவிட, ஆயிரக்கணக்கான சங்குகள் ஒன்றாகத் திரண்டு ஒரே நேரத்தில் ஒரே சுருதியில் முரன்று எழுப்பும் ஓசைபோல ஆதிநாதத்தின் ஒசை எழும். எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதத்தில் பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் அத்தனை சாதி பேதங்கள் உண்டு. பறப்பன, ஊர்வன, நடப்பன, நீந்துவன என்பன போன்ற அந்த அந்தச் சாதிக்கேற்பச் சில குணங்கள் பிறப்போடு தோன்றும். இக்குணங்களைப் போக்கிக் கொள்ளுதல் ஏறத்தாழ இயலாத காரியம். மறையோன் எனை ஆள வெளிப்பட்டு வருவானேயாகில் இந்தச் சாதிபற்றி வரும் தவிர்க்கமுடியாத குணங்கள்கூடச் சலித்துப்போய் உயிர்களைவிட்டு நீங்கிவிடும். ஒன்றை நன்று என்று கருதும் ஒரு சாதி; மற்றொரு சாதி மற்றொன்றை நன்றென்று கருதும். ஓர் இனம் நன்று என்று கருதுவதை மற்றோர் இனம் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்வதற்கில்லை. இந்த வேறுபாடுகள் அனைத்தும் அவன் வெளிப்படும்பொழுது அடங்கிவிடும். ஒன்றை நன்று என்று கூறுவதால் அதன் எதிராகவுள்ள ஒன்று தீது என்ற எண்ணம் மனத்திடைத் தோன்றுமன்றே! சமதிருஷ்டி என்று சொல்லப்பெறும் அதீத நிலையில் எந்த ஒன்றையும் நன்று என்றோ தீது என்றோ இனம்பிரித்துச் சொல்லும் இயல்பு முற்றிலுமாக அடங்கிவிடும். உயிர்களிடத்துச் சாதிபற்றி வருகின்ற, இனம் பிரித்துக் காணும் இந்த இயல்பு, அவன் வெளிப்படும்போது நீங்கும் @丁邸了ö。 ; : . சாதி வேறுபாடுகளுடன் தோன்றும் இந்த உயிர்கள் அனைத்திற்கும் பொது இலக்கணம் ஆசை என்பதாகும்.