பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 திருவாசகம் சில சிந்தனைகள்-5 விலங்கினங்கள்கூட உணவு மிகுதியாகக் கிடைக்கும் இடத்தை அணுக ஆசைப்படுகின்றன. உயிர்களின் பிறப்போடு பிறந்த இந்த ஆசை, ஒன்றில்லாவிட்டால் ஒன்றின்மேல் சென்றுகொண்டே இருக்கும். அது என்றும் அடங்குவதுமில்லை. மறையோன் வெளிப்படுவானே யானால் பல துறைகளில் விரிந்துகொண்டு செல்லும் இந்த ஆசை திடீரென்று மடங்கி, ஒரே ஒர் ஆசையாக வெளிப்படும். அடியார்களுக்கு அடியோங்கள் நாம் என்ற அளவில், அந்த ஆசை மேலும் வளராமல் அடங்கிவிடுகிறது. இந்த நிலை வருமேயானால் அந்த ஆசை, அடியார் அடியோங்கள் நாம் என்ற அளவில் நின்றுவிடும். அதோடல்லாமல் பிற அடியார்களுடைய சிவானந்த அனுபவங்களைக் கேட்டுத் தானும் ஆனந்தம் அடைகிறது. மனித மனத்தின் இயல்பையும் செயற்பாட்டையும் நன்கு அறிந்த அடிகளார், மிகமிக முக்கியமான ஒரு செய்தியை இந்த இரண்டு அடிகளிலும் கூறுகிறார். மனிதனுடைய ஆசைகள் வரம்பற்றவை, விரிந்துகொண்டே செல்லும் இயல்பை உடையவை. ஆதலால் அவற்றை அடக்கி ஆளுதல் மிகமிகக் கடினமானதாகும். ஒரு திசையில் செல்லும் ஆசையை அரும்பாடுபட்டு அத்திசையில் செல்லாமல் நிறுத்துவோமேயானால் அந்த ஆசை திடீரென்று வெடித்து, நாம் சற்றும் எதிர்பாராத நேரத்தில் வேறு திசையில் சென்றுவிடும். முன்னர்ச் சென்ற திசையைவிட இது மோசமானதாகக்கூட இருக்கலாம். அது நிகழாமலிருக்க மூன்று விஷயங்களை அடிகளார் இங்கே பட்டியலிட்டுக் காட்டுகிறார். ஒன்று, அடக்கமுடியாத இந்த ஆசைகூட மறையவன் வெளிப்படுவானேயானால் அடங்கிவிடும். இரண்டு, அவ்வாறு அடங்கிய ஆசையை அடியார் அடியோங்கள் நாம் என்ற எல்லையில் நிறுத்தவேண்டும். மூன்றாவது, இந்த எல்லைக்குள் நின்று, பிற அடியார்களுடைய