பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்படைஆட்சி-3-148 சிவானுபவங்களைக் கேட்பதில் அந்த ஆசையை அடக்கிக் கொள்ள வேண்டும். முதலாவது நடைபெற்ற பின்னரும் இரண்டாவதும் மூன்றாவதும் நடைபெறவில்லையானால் ஒரு மிகப் பெரிய ஆபத்து எதிரே தோன்றும். மறையவன் வெளிப்பட்டதால் அடங்கி ஒருமுகப்பட்ட ஆசையை உடனே இரண்டாம், மூன்றாம் வழிகளில் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தத் தவறினால் என்ன விளையும் தெரியுமா? ஒன்றாம் நிலையில் அடங்கி ஒடுங்கி ஒருமுகப்பட்ட இந்த ஆசை, இரண்டாம் மூன்றாம் வழிகளில் செலுத்தப் படாதபோது 'செம்கயல் ஒண் கண் மடந்தையர்' உடலிலும் சிந்தையிலும் புகுந்து திளைக்கத் தொடங்கிவிடும். இந்த ஆபத்து நிகழாமல் இருப்பதற் காகவே, அடியார் கூட்டத்திடை இருக்கவேண்டும் என்பதையும், அவர்களுடைய சிவானுபவங்களைக் கேட்டுத் திளைக்கவேண்டும் என்பதையும் ஆசை எலாம் அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே? என்றும் "சீர் அடியார்கள் சிவானுபவங்கள் தெரிந்திடும் ஆகாதே? என்றும் இரண்டு அடிகளில் கூறினார். ஈறறியாத மறையோனாகிய அவன் எனை ஆள வரும்போது எப்படி வருவான் என்று நினைக்கிறீர்கள்? மீன்வலை வீசிய கானவன் ஆகவும் (635) என்னுடை நாயகனாகிய ஈசனாகவும் (637) என் அத்தனாகவும் (640) இந்து சிகாமணியாகவும் (64 வருவான் என்க. இவ்வாறல்லாமல் மற்றோர் வடிவம் கொண்டு தம்முள் புகுந்தருள்வான் என்பதை, எட்டாவது (642) பாடலின் முடிமணியாக எங்கும் நிறைந்து அமுதுநூறு பரஞ்சுடர்' எய்துவான் என்று கூறுகிறார். இந்த ஒரு சிற்றடியில் இதுவரை கூறப்பெறாத அவனது இயல்புகளைச் சொற்செல்வம் உடையவராகிய அடிகளார் சில சொற்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். எங்கும்