பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 திருவாசகம் சில கிந்தனைகள்-5 நிறைந்தவன் என்பது முதலாவது இயல்பு: அமுத வடிவமாக இருத்தல் இரண்டாவது இயல்பு ஊறுதல் மூன்றாவது இயல்பு பரஞ்சுடராய் நிற்றல் நான்காவது இயல்பு அமுது என்று கூறியவுடன் அள்ளக்குறையக் கூடியது என்ற எண்ணம் நம்முடைய மனத்தில் தோன்றும் ஆதலால் அதனை மறுக்க ஊறு என்ற சொல்லைப் பெய்கிறார். "ஊறு பரஞ்சுடர் என்ற வினைத்தொகையால் முக்காலத்திலும் இந்தஅமிழ்து ஊறும் என்ற பொருளையும் பெறவைத்தார். பரஞ்சுடர் என்று கூறியவுடன் ஒளி, வெப்பம் என்ற இரண்டும் சுடரின் இயல்பு என்ற எண்ணம் தோன்றுமன்றே? இவற்றைப் பரிகரிக்க 'அமுது ஊறு பரஞ்சுடர்' என்றார். அமுது ஊறு என்றமையால் வெப்ப மில்லாத குளிர்ச்சியுடையது என்பதைப் பெறவைத்தார். சுடர் என்று கூறாது பரஞ்சுடர் என்றமையால் புறக் கண்களால் காணும் ஒளியன்று என்பதையும் பெறவைத்தார். சுடருக்குள்ள மற்றோர் இலக்கணத்தையும் இங்குச் சிந்தித்தல் வேண்டும். எத்தகைய சுடராயினும் அது பற்றிநின்ற பொருளை ஒளிரவிடாமல் கறுப்பாகவே இருக்கச்செய்யும். அன்றியும் ஒரளவே பரவி அந்த எல்லைக்கு அப்பால் சென்று பரவ முடியாமல் நிற்கும் இயல்பும் சுடருக்கு உண்டு. இக்குறைபாடுகளை நீக்கப் பரஞ்சுடர் என்றும் எங்கும் நிறை பரஞ்சுடர் என்றும் கூறினாராயிற்று. ওঁ ওঁ ওঁb