பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. ஆனந்த மாலை (சிவானுபவ விருப்பம்) ஆனந்தமாலை என்று யாரோ, என்றோ தலைப்புத் தந்துபோயினர். கிடைக்கும். ஏழு பாடல்களையும் படித்துப் பார்த்தால் குருநாதருக்கு எதிரே அடிகளார் கண்ட ஆனந்தத்தைக் கூறுவனவாக இல்லை. இப்பாடல்கள். அதற்குப் பதிலாக இனி உன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே (643), பிற்பட்டு இங்கு இருந்தேன் நோய்க்கு விருந்தாயே (644), ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே (645), நான்தான் வேண்டாவோ (647), ‘இனித்தான் தேற்றாயே (648), செய்வது ஒன்றும் அறியேனே’ (649) என்றெல்லாம் அடிகளார் பாடுவது எந்த நிலையிலும் ஆனந்தத்தை அறிவிப்பதாகத் தெரியவில்லை. இத்தலைப்புக்குப் பதிலாகக் கழிவிரக்க மாலை என்று தலைப்புத் தந்திருந்தால் பொருந்தும்போலும். பொதுவாக மாலை’ என்பது பத்துப் பாடல்களைக் கொண்டதாகும். இப்பகுதியில் 6/(Ք பாடல்களே உள்ளமையின் ஏனைய மூன்று பாடல்களும் மறைந்தது தமிழரின் கவனக்குறைவுக்கு எடுத்துக்காட்டாகும். 'சிவானுபவ விருப்பம்’ என்ற உட்தலைப்பு வழக்கம் போலில்லாமல் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு பாடலின் இறுதி அடியும் கூடும் வண்ணம் இயம்பாயே, கொடியேன் என்றோ கூடுவதே போன்ற தொடர்களால் முடிதலின், இழந்த சிவானந்தத்தை மீட்டும் அடைய ஆவல் கொண்ட அடிகளாரின் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றன.