பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148_திருவாககம் சில சிந்தனைகள்-5 643. மின் நேர் அனைய பூம் கழல்கள் - அடைந்தார் கடந்தார் வியன் உலகம் பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றாநின்றார் அமரர் எல்லாம் கல் நேர் அனைய மனக் கடையாய் கழிப்புண்டு அவலக் கடல் வீழ்ந்த என் நேர் அனையேன் இனி உன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே 1 நின் திருவடியை அடைந்தவர்கள் யாரென்றால் இந்தப் பரந்த உலகின் மாயையைக் கடந்தவர்கள் ஆவார்கள். இந்த நிலை இல்லாமல் தேவர்களாக உள்ளவர்களும்கூடப் பொன்போன்ற மலர்களைப் பறித்து உன் திருவடியில் இட்டு வழிபட்டுக்கொண்டே இருக்கின்றனர். 'உண்மை அடியார்கள், தேவர்கள் என்போர் நிலை இவ்வாறாக, கல்லை ஒத்த மனமுடைய கடையனாகிய யான் உன் அருகில் வரத் தகாது என்று கழிக்கப்பட்டேன். உன்னால் ஒதுக்கப்பட்டது மட்டுமன்று; துயரக் கடலில் அல்லவா வீழ்ந்துவிட்டேன். இக்கடலில் அவதியுறுகின்றவனாகிய யான், உன்னுடைய திருவடியை அடைவதற்குரிய வழி இயம்பியருள்வாயாக' என்கிறார். 64. என்னால் அறியாப் பதம் தந்தாய் யான் அது அறியாதே கெட்டேன் உன்னால் ஒன்றும் குறைவு இல்லை உடையாய் அடிமைக்கு யார் என்பேன் பல் நாள் உன்னைப் பணிந்து ஏத்தும் பழைய அடியரொடும் கூடாது என் நாயகமே பிற்பட்டு இங்கு இருந்தேன் நோய்க்கு விருந்தாயே 2 ‘என்னுடைய தலைவனே! r நான் அறிந்துகொள்ள முடியாத மிகுந்த உயர் பதமாகிய உன் திருவடிகளையே எனக்குத் தந்துவிட்டாய். அந்த நிலையில் உன்மேல் குறை