பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த மாலை-_149 சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனால், அப்பதத்தின் அருமை அறியாமல், அதனை வைத்து அநுபவிக்க முடியாமல் கெட்டேன். 'இந்த அடிமை செய்த பிழைக்கு யாரைப் பொறுப்பு என்று சொல்லமுடியும்? இந்த அடிமை செய்த பிழை யாது என்றால் தரப்பட்ட பதத்தின் பெருமை அறியாமல் அதனை விட்டு நீங்கியதாகும். 'நீ பதம் தந்த காலத்து உன்னைச் சுற்றி அமர்ந்திருந்த பழைய அடியார்களின் உடன் செல்லாமல், இங்கேயே தங்கிவிட்டேன். தங்கியதால் நீ தந்த பதத்தை இழந்துவிட்டேன். அதற்குப் பதிலாகப் பல்வேறு நோய்கள் என்னிடம் அடைக்கலம் புகுந்துள்ளன என்றவாறு. 645. சீலம் இன்றி நோன்பு இன்றிச் செறிவே இன்றி அறிவு இன்றித் தோலின் பாவைக் கூத்தாட்டு ஆய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை மாலும் காட்டி வழி காட்டி வாரா உலக நெறி ஏறக் கோலம் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே 3 தோலின் பாவைக்கூத்து-பொம்மலாட்டம் பொம்மலாட்டத்தை நிகழ்த்துபவன் தோலினால் செய்யப்பட்ட பொம்மைகளை, வெள்ளைத் திரையின் முன்னேவிட்டு ஆடச்செய்வான். பொம்மையின் பல உறுப்புக்களிலும் கட்டப்பட்ட கயிறு அவனுடைய கையில் உள்ள விரல்களோடு இணைக்கப்பட்டிருக்கும். ஆதலால் அவன் ஆட்டுவிக்க, இப்பொம்மைகள் ஆடுகின்றன. இனி ஆட்டுவதில்லையெனப் பொம்மலாட்டக்காரன் முடிவு செய்துவிட்டான். இந்தத் தோல் பொம்மைகள் கீழே விழுந்து கிடப்பது தவிர வேறொன்றும் செய்யமுடியாது.