பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 திருவாசகம் சில சிந்தனைகள் 5 அடிகளார் தம்மை வீழ்ந்துகிடக்கும் பொம்மையோடு உவமிக்கின்றார். ஆட்டுபவன் அவன், அந்த ஆட்டத்தின் ஒரு பகுதியாகத் திருப்பெருந்துறையில் திருவாதவூரர் என்ற மனிதரை, மணிவாசகரென்ற ஒப்பற்ற பொம்மையாகச் செய்துவிட்டான். என்ன காரணத்தாலோ பொம்மலாட்டக்காரன் இந்தப் பொம்மையான அடிகளாரைச் செயலிழக்கச் செய்துவிட்டான். அதன் பயன் என்ன? பொம்மை வீழ்ந்து கிடக்கிறது. வீழாமல் இருந்திருந்தால் சீலம், நோன்பு, செறிவு, செயல் உறுதிப்பாடு) அறிவு ஆகிய அனைத்தும் ஆடுகின்ற அந்தப் பொம்மையினிடத்து நிறைந்து இருந்திருக்கும். ஆனால், இப்பொழுது செயலிழந்து கிடக்கும் அந்தப் பொம்மையினிடத்துச் சீலம், நோன்பு செறிவு, அறிவு என்பவை இல்லையாகிவிட்டன. உலகிடைப் பிறந்தவர்கட்கு இயல்பாக அமைந்துள்ள அறிவுமயக்கம், (மால்) என்ன என்பதைக் காட்டினான். இந்த மாலைப் புரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் இதிலிருந்து வெளியேறுவதற்குரிய வழியையும் காட்டினான். இவை இரண்டையும் எவ்வாறு செய்தான்? அந்தப் பொம்மலாட்டக்காரன் மறைவாக நின்று தம்மை விளையாடச் செய்யாமல் குருநாதர் வடிவு தாங்கித் தன் கோலத்தை உள்ளவாறு காட்டி, மீட்டு வாரா உலகிற்குச் செல்லும் வழியையும் காட்டினான். அவனால் கைவிடப்பட்ட கொடியேனாகிய நான் மீட்டும் அவனைக் கூடுவது எந்நாளோ என்று வருந்தியாவாறு. 646. கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடு இலாதாய் பழி கொண்டாய் படுவேன் படுவது எல்லாம் நான் பட்டால் பின்னைப் பயன் என்னே