பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலாப் பத்து 7 561. என்பு உள் உருக்கி இரு வினையை ஈடு அழித்துத் துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மை செய்து முன்பு உள்ளவற்றை முழுது அழிய உள் புகுந்த அன்பின் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 3 இரு வினையை ஈடு அழித்து இருவினைகளின் வலிமையை அடியோடு போக்கி) என் உள்ளன்பு காரணமாகக் குலாத் தில்லை நாயகனை உள்ளே ஆவாஹனம் செய்தபொழுது, அவன் என்ன செய்தான்? எலும்புகளை உள்ளே உருகுமாறு செய்தான். நல்வினை தீவினை என்ற இரண்டும் பிறவிக்கு வித்தாகலின் அவற்றை அழித்தான். பிறவி இருக்கின்ற வரையில் துன்பம் இயல்பாக உண்டு. ஆதலின் அதனையும் களைந்தான். என் வினைகளை அவன் போக்கினானேனும் நான் கொண்டிருந்த ஏனைய உலகத் தொடர்புகள் துவந்துவம்) என்னைப் பற்றிக் கொள்ளாதபடி தூய்மை செய்தான். இதுவரையில் கூறப்பெற்றவை தம் மனம் காரணமாக ஏற்பட்ட குற்றங்களாதலின் அவற்றைப் போக்கியதோடு நில்லாமல் முன்புள்ளவற்றை முழுதும் அழித்தான் என்கிறார். அப்படியானால் என்பை உருக்குதல், இருவினை. ஈடழித்தல், துன்பம் களைதல், துவந்துவங்கள் தூய்மை செய்தல் என்பவற்றை யெல்லாம் செய்தபிறகு ஒன்றும் எஞ்சியிருக்கவில்லை என்று நினைக்கின்றோம். ஆனால் அடிகளார் முன்புள்ளவற்றை முழுதழியச் செய்தான் என்று கூறுகிறாரே! அப்படியானால் முன்புள்ளவை என்று சொல்லப்படுவன யாவை? பிறவிதோறும் தொடர்ந்து வரும் அஞ்ஞானம் என்ற ஒன்றும் இன்னும் செயல்பாட்டிற்கு வராத சஞ்சித வினை என்ற ஒன்றும் முன்புள்ளவற்றை என்ற தொடரால் குறிக்கப்பெற்றன.