பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த மாலை-_151 கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குருமணியே நடு ஆய் நில்லாது ஒழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே 4 திருப்பெருந்துறைக் குருமணியே கெடுவதற்குரிய பல இழிகுணங்கள் உடையவனாகிய யான், அவற்றின் வழியிற் சென்று கெட்டுப்போய்க்கொண்டேயிருக்கின்றேன். அழிவில்லாதவனே! நான் இத்தகையவன் என்று அறிந்திருந்தும் என்னை ஆட்கொண்டு, இப்பொழுது கைவிட்டுவிட்டாய் கேடுகள் பலவும் உடைய ஒருவன் அனுபவிக்கவேண்டிய துன்பங்களையெல்லாம் நான் இன்னும் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறேன். 'குற்றமுடையவன் என்று தெரிந்திருந்தும் என்னை ஆட்கொண்ட நீ இப்பொழுது இடையே கைவிட்டால் அடைக்கலப் பொருளை இடையில்விட்ட பழி உனக்கு வந்தே தீரும். இவ்வாறு, துன்பத்தை நான் அனுபவிப்பதில் யாருக்கு என்ன பயன்? ‘என் குற்றம் பாராது உன்னால் ஆட்கொள்ளப்பெற்ற யான், நரகிடை வீழுமாறு செல்கையில் நீ வாளா பார்த்துக் கொண்டிருப்பின் உன்னுடைய நடுவுநிலைமை என்ன ஆகும்? ஆட்கொள்ளப்பெற்ற அடைக்கலப்பொருள் எக்கேடோ கெட்டு ஒழியட்டும் என்று விட்டுவிடுவது நடுவுநிலையின் பாற்பட்டது அன்று என்றவாறு. 647. தாய் ஆய் முலையைக் தருவானே தாராது ஒழிந்தால் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனித்தான் நல்குதியே தாயே என்று உன் தாள் அடைந்தேன் தயா நீ என்பால் இல்லையே நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ 5