பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152-திருவாசகம் சில சிந்தனைகள் 5 - "முலையூட்டும் தாய் போல அகில உலகிற்கும் தாயாய் நின்று உயிர்களைக் காக்கின்றவனே! நீ இருந்தும், உன் கருணை இருந்தும் அதனைப் பயன்படுத்த முடியாத சவலைப் பிள்ளையாக நான் கழிந்துபோதல் நியாயமா?. "தாயே! உன் கருணையைத் தராவிட்டால் பயனற்றவனாக ஆகிவிடுவேன் யான். இதனை உணர்ந்து தாயே! நீயே கதி என்று உன்னை அடைந்தேன் எனக்கு அருளை நல்கவேண்டியது உன் கடமை. 'அன்று திருப்பெருந்துறையில், என்னையும் என் அடிமைத்திறத்தையும் ஏற்றுக்கொண்டாய். ஆனால், இப்பொழுது என்னை ஒதுக்கிவிட்டாய். என்னைமட்டும் ஒதுக்கியது எந்த முறையில் நியாயமாகும்? என்றவாறு, 648. கோவே அருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே ஆ ஆ என்னாவிடில் என்னை அஞ்சேல் என்பார் ஆரோதான் சாவார் எல்லாம் என் அளவோ தக்க ஆறு அன்று என்னாரோ தேவே தில்லை நடம் ஆடி திகைத்தேன் இனித்தான் தேற்றாயே 6 தலைவனே! ஆட்கொள்ள வேண்டாவா? நான் இப்படியே பயனின்றி அழிந்தால் அது முறையாகுமா? ஐயனே! "ஐயோ பாவம்" என்றுகூட நீ கூறாவிட்டால் அடியேனை, அஞ்சவேண்டா என்று கூறுபவர் யாருளர்? ‘உலகில் இறந்துபோகின்றவர்கள் எல்லாம் உன் அருள் பெற்றவர்களா? அல்லது என்போன்றவர்களா? உன் அருள் பெறாது நான் இறந்தால், உன்னால் ஆட்கொள்ளப் பெற்ற ஒருவன், இவ்வாறு பயனின்றி இறந்தான் என்று தக்கோர் கூறுவர். அந்தப் பழிச்சொல் உன்னையே சேரும். -