பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சோப் பதிகம் 157 இறைவன் திருவடியில் எல்லையற்ற ஆனந்தத்தை நிலையாக அனுபவித்துக்கொண்டிருக்கும் என்று சைவர்களும், நித்தியசூரிகளாக இருந்து பூரீ வைகுண்டத்தில் எம்பெருமான் திருவடி நீழலில் ஆனந்தத்தை அனுபவிக்கும் என்று வைணவர்களும் கூறிப்போயினர். இந்த அடிப்படையைக் கொண்டு பார்த்தால், சிவம் ஆக்கி என்பது சற்றுப் புதுமையாகவே உள்ளது. சிவ என்ற சொல்லுக்கு மங்களத்தைச் செய்வது என்றே கிருஷ்ண யஜூர் வேதத்தின் ஒரு பகுதியாகிய பூரீருத்திரம் கூறிச் செல்கிறது. சிவம் என்பதைப் பெயர்ச் சொல்லாக எந்த வேதமும் பயன்படுத்தவில்லை. அந்தப் பொருளைவைத்துப் பார்த்தால், சிவமாக்கி என்பதற்கு மங்களத்தைச் செய்வது என்ற பொருளைக்கொள்ள நேரிடும். ஆக்குதல் என்ற சொல் முன்னரே உள்ள ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளாக மாற்றுதலையே குறிக்கும். சோறு ஆக்கினான், சிற்பத்தை ஆக்கினான் என்ற தொடர்களில் வரும் ஆக்கினான் என்ற சொல் அரிசியைச் சோறாக்கினான் என்றும், ஒரு கல்லை ஒரு வடிவு வரும்படி ஆக்கினான் என்றும் பொருள் தந்து நிற்பதைக் காணலாம். அந்த அடிப்படையில் சிவமாக்கி என்ற தொடரைப் பார்ப்போமேயானால், முன்னர்இருந்த ஆன்மாவைச் சிவமாக ஆக்கினான் என்று பொருள்கொள்ள நேரிடும். எப்படிச் சிந்தித்தாலும் சிவமாக்கி என்ற தொடரின் பொருள் நன்கு விளங்குமாறில்லை. இன்றுள்ள சைவர்கள் சிலர், சிவம் என்ற சொல்லுக்கு, எங்கும் வியாபித்து நிற்பது என்ற பொருள் கொண்டு சிவமாக்கி என்பதற்கு, மணிவாசகரை அந்த வியாபகத்துள் அடங்குமாறு செய்தான் என்று பொருள் கூறுகின்றனர். வியாபகம் என்ற சொல்லுக்கு எல்லாவற்றிலும் எங்கும் நிறைந்திருப்பது என்பதே பொருளாகும். அப்படியானால்