பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 திருவாசகம் சில சிந்தனைகள்-5 இந்த வியாபகத்தில் மணிவாசகர் என்பவர் இதுவரை எப்படி உட்படாமல் இருந்தார் இப்பொழுது புதிதாகப் புகுத்துவதற்கு! இவ்வாறின்றி சிவமாக்கி என்பதைத் தாமாக்கி என்றும் பொருள் கூறுவர் உளர். இந்த இருவிளக்கங்களும் பொருந்துமாறில்லை. 651. நெறி அல்லா நெறி தன்னை நெறியாக நினைவேனைச் சிறு நெறிகள் சேராமே திரு அருளே சேரும்வண்ணம் குறி ஒன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே 2 தவறான வழிகளில் சென்று கொண்டிருந்த என்னை அவற்றை விட்டுத் தன் திருவடியே சேரும் வண்ணம் அருள் செய்தான்; அவன் யார்? 'குறி ஒன்றும் இல்லாத கூத்தன்” என்கிறார். இந்தத் தொடர் முரண் அழகுடன் மிளிர்கின்றது. குறி ஒன்றும் இல்லாதது என்றால், தனக்கு என்று ஒரு வடிவோ பெயரோ அடையாளமோ இல்லாதது என்பது பொருளாகும். ஒன்றுமே இல்லாத இதனை எவ்வாறு அறிவது? மிகச் சிறப்பாகக் கூத்தன்” என்ற சொல்லால் விடையிறுக்கிறார். எதுவுமே இல்லாத இது, ஒரு செயலை ஓயாது நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. அதுதான் கூத்து அல்லது நடனம் என்பதாகும். நடனம் என்று கூறியவுடன் சுழன்றுவருதலை நினைவூட்டும். குறியொன்றும் இல்லாத இந்தப் பொருள் சுழன்று சுழன்று வருகின்றது என்றார். அப்படிப்பட்ட ஒரு பொருள் அணுவினும் சிறியதாக உள்ளது என்பதைச் சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் நின்ற நின் தன்மை (394) என்று குறிப்பிடுகிறார். . அடுத்து அடிகளார் தன் கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளிய ஆறு' என்கிறார். அணுவினும் சிறிதாய் ஓயாது சுழன்றுகொண்டிருப்பதாய், எங்கும்