பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சோப்-பதிகம்-159 நிறைந்திருப்பதாய் உள்ள ஒரு பொருளைக் காண்டலோ அறிதலோ ஏறத் தாழ இயலாத காரியம். மிக நுண்ணிய பொருளைக் காண உதவுவது நுண்ணோக்காடி (microscope) ஆகும். சுழன்று ஆடிக்கொண்டிருக்கும் அந்த நுண்பொருள், தன்னுடைய திருவருளாகிய நுண்ணோக்காடியை அடிகளாருக்குத் தந்தது. கண்ணுக்குத் தெரியாத பொருள் நுண்ணோக்காடி மூலம் காணும்போது மிகப் பெரிய வடிவும் உருவும் பெற்றுக் காணப்படுவதுபோல் திருவருள் என்ற நுண்ணோக்காடி மூலம் அடிகளார் மிக நுண்ணிய கூத்தனின் கூத்தைக் காணமுடிந்தது. என்ன அதிசயம்! கட்புலனுக்கெட்டாத அந்தக் கூத்தன் என்ற அணுவினுள் பிரபஞ்சம் முழுவதுமல்லவா காட்சி தருகிறது! புல்லின் நுனியிலிருக்கும் பனித்துளியில் மிகப்பெரிய ஆலமரம் முழுவதுமாகக் காட்சிதருவதுபோல் கூத்தன் என்ற அணுவினுள் பிரபஞ்சமே காட்சி தருகிறது. இந்த நுணுக்கமான அற்புதத்தைத்தான் கூத்தன், தன் கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளிய ஆறு என்று பாடுகிறார். வெண்ணெய் திருடியுண்ட கண்ணனின் வாயைத் திறக்குமாறு யசேரிதை ஒரு நாள் மிரட்டினாள். இதற்குமுன்னர் எத்தனையோ தடவை இதேபோன்ற சந்தர்ப்பங்களில் அவன் வாயைத்திறந்தான். அந்த வாயினுள் ஒட்டிக்கொண்டிருந்த வெண்ணெயையும், அழகிய சிறு பற்களையும்தான் யசோதை கண்டாள் இன்றும் அதே மாதிரித்தான் வாயைத் திறந்து காட்டச் சொன்னாள். இப்பொழுது கண்ணன் தன் திருவருளாகிய நுண்ணோக்காடியை யசோதையின் கண்களில் மாட்டிவிட்டான். என்ன அதிசயம்! கண்ணனின் திறந்த வாயினுள் பிரபஞ்சம் முழுவதும் இயங்கிக் கொண்டிருப்பதை அந்தப் பெருமாட்டியால் காணமுடிந்தது.